விருச்சிக ராசி 
ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2026: விருச்சிகம்

விருச்சிக ராசிக்கு இந்தாண்டு எப்படி இருக்கும்?

ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன்

கிரகநிலை

தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் - சுக ஸ்தானத்தில் சனி, ராகு - களத்திர ஸ்தானத்தில் சந்திரன் - அஷ்டம ஸ்தானத்தில் குரு(வ) - தொழில் ஸ்தானத்தில் கேது என வலம் வருகிறார்கள் (வாக்கியப் பஞ்சாங்கப்படி).

கிரக மாற்றங்கள்

06.03.2026 அன்று சுக ஸ்தானத்தில் இருந்து சனி பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

26.05.2026 அன்று அஷ்டம ஸ்தானத்தில் இருந்து குரு பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

13.11.2026 அன்று ராகு பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

13.11.2026 அன்று கேது பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்

இந்த வருடம் உங்கள் வாக்கு வன்மையால் ஆதாயம் உண்டாகும். தைரியம் அதிகரிக்கும். எல்லா விதத்திலும் நன்மையைத் தரும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். காரிய வெற்றி ஏற்படும். பணவரத்து கூடும். எதிர்பாலினத்தாருடன் பழகும்போது கவனம் தேவை. எதிர்ப்புகள் குறையும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்குக் கீழ் நிலையில் உள்ளவர்களால் லாபம் கிடைக்கும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். தேவையான சரக்குகள் கையிருப்பு இருக்கும். பொருளாதாரம் மிகச் சிறப்பாக இருக்கும். கடன்களை அடைப்பதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதையும் செய்து முடிப்பதில் துணிச்சல் உண்டாகும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். எதிர்பாராத இடமாற்றம் ஏற்படலாம். சக ஊழியர்களின் ஆதரவால் எந்த ஒரு கடினமான வேலையையும் மிகச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். புதிய எண்ணங்கள் உருவாகும்.

குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். குடும்ப விஷயங்களில் சரியான முடிவுக்கு வர முடியாத தடுமாற்றம் ஏற்படலாம். உறவினர்களுடன் பேசும்போது கவனமாக பேசுவது நல்லது. வாகனங்களில் செல்லும்போதும் பயணங்களின்போதும் கவனம் தேவை. அக்கம்பக்கத்தினரிடம் பழகும்போது கவனம் தேவை. இல்லற சண்டைகள் ஏற்படலாம். எச்சரிக்கை அவசியம்.

பெண்களுக்கு: திறமையான பேச்சின்மூலம் எதையும் வெற்றிகரமாகச் செய்து முடித்து ஆதாயம் அடைவீர்கள். எதிர்ப்புகள் குறையும். பணவரத்து கூடும். தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

கலைத்துறையினருக்கு: வாகனங்களை ஓட்டி செல்லும் போது கவனம் தேவை. தங்கள் உடைமைகளைக் கவனமாகப் பாதுகாத்துக் கொள்வது அவசியம். தனிமையாக இருக்க நினைப்பீர்கள்.

அரசியல்துறையினருக்கு: பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு மேலிடத்தை அனுசரித்துச் செல்வது நல்லது. பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். எடுத்த வேலையைச் செய்து முடிப்பதற்குள் பல தடங்கல்கள் உண்டாகும். புதிய ஒப்பந்தங்கள் எடுக்கும்போது புதிய விஷயங்களை ஆரம்பிக்கும் போது சரியான ஆலோசனை என்பது அவசியம்.

மாணவர்களுக்கு: பாடங்களை படிப்பதில் ஆர்வம் உண்டாகும். கல்வியில் தேர்ச்சி பெறவும் கூடுதல் மதிப்பெண் பெறவும் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். கல்வி ஸ்தானத்தை ராகு அலங்கரிப்பதால் கல்வியில் சிறுசிறு தடைகள் ஏற்படலாம். சோம்பேறித்தனத்தை விடுவது நன்மையைக் கொடுக்கும்.

விசாகம் 4ம் பாதம்

இந்த வருடம் தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் பெறக் கடினமாக பணியாற்ற வேண்டி இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். முயற்சிகள் எதிர்பார்த்த பலன் தராமல் போகலாம். வீண் அலைச்சல் உண்டாகலாம். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை ஆலோசனை செய்யாமல் தானாக எதையும் செய்வது உங்களுக்கு மன வருத்தத்தைத் தரலாம். கணவன், மனைவிக்கிடையே  வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம் கவனம் தேவை. பிள்ளைகளுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. எதிலும் முழு கவனத்துடன் ஈடுபடுவது நன்மையைத் தரும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும்.

அனுஷம்

இந்த வருடம் மற்றவர்களுக்கு உதவப் போய் வீண் பழி ஏற்படலாம் கவனம் தேவை. தொழில் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். ஆனால் பணவரத்து திருப்திகரமாக இருக்கும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பது நன்மை தரும்.  கூடுதல் பணிச்சுமையை ஏற்க வேண்டி இருக்கும். மேலிடத்திடம் உங்களது கருத்துக்களைத் தெரிவிக்கும்போது கவனமாகப் பேசுவது நல்லது. வீண் அலைச்சல், தடை தாமதம் ஏற்படலாம் கவனம் தேவை. புதிய முயற்சிகளைத் தள்ளிப் போடுவது நல்லது.  வீண் அலைச்சல் ஏற்படலாம். அவசரப்படாமல்  நிதானமாக எதையும் செய்தால் வெற்றி நிச்சயம்.  உங்கள் எதிர்ப்புகள் விலகும். எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். மாணவர்கள் கூடுதலாகப் பாடுபட வேண்டி இருக்கும். சகோதரர்களிடம் கவனமாகப் பேசுவது நல்லது.

கேட்டை

இந்த வருடம் புதிய நபர்களின் நட்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். உடல் நல பாதிப்பு ஏற்படலாம். ஏற்கனவே செய்த ஒரு செயலை நினைத்து வருந்த நேரிடும். பயணங்கள் செல்ல நேரிடலாம். தந்தையின் உடல் நிலையில் கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரம் தொடர்பான வழக்கு விவகாரங்களைத் தள்ளிப்போடுவது நல்லது. எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் பணத்தேவை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். குடும்பத்தில் ஏதாவது வீண் விவகாரங்கள் ஏற்பட்டு நீங்கும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை உண்டாகலாம். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் தாமதமாகக் கிடைக்கும்.

பரிகாரம்: முருகனுக்கு பாலபிஷேகம் செய்து அர்ச்சனை செய்து வணங்க மன அமைதி உண்டாகும். காரிய அனுகூலம் ஏற்படும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன், வெள்ளி

அதிர்ஷ்ட ஹோரைகள்: செவ்வாய் - குரு - சந்திரன்

எண்கள்: 4, 5, 7

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாரடைப்பு... இதையெல்லாம் சாப்பிடக் கூடாது!

மொழியுரிமை என்றாலே முதல்வர் மு.க. ஸ்டாலின்தான்: உதயநிதி

இன்ஸமாம் உல் ஹக்கின் 33 ஆண்டுகால சாதனையை முறியடித்த பாகிஸ்தான் கேப்டன்!

2025-ல் அதிகம் வசூலித்த 30 திரைப்படங்கள்!

பிக் பாஸ் 9 : கனி வெளியேறிய நாளை வாழ்வில் மறக்கமாட்டேன் - விஜே பார்வதி

SCROLL FOR NEXT