எண் ஜோதிடம்

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 3

எப்படி இருக்கப்போகிறது இந்த மாதம்..

ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன்

3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

விடா முயற்சியைக் கைவிடாத மூன்றாம் எண் அன்பர்களே இந்த மாதம் பணவரத்து திருப்திகரமாக இருக்கும். வாக்கு வன்மை ஏற்படும்.  விருந்து கேளிக்கை  நிகழ்ச்சியில்  கலந்து கொள்வீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பலவகை யோகம் உண்டாகும். அடுத்தவர்கள் உதவி கிடைக்கும். தொழில் வியாபாரம் நன்றாக  நடக்கும். எதிர்பார்த்த ஆர்டர்கள்  வந்து சேரும். அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்களை சாதகமாக முடியும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள்  புத்திசாதூரியத்துடன் நடந்து கொண்டு நன்மை அடைவார்கள்.  எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கக் கூடும். குடும்பத்தில் இதமான  சூழ்நிலை காணப்படும். புதிய வீடு கட்டுவது, பழைய வீட்டை புதுப்பிப்பது போன்ற பணிகளை தொடங்க முற்படுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளால் பெருமை சேரும். அவர்களுக்கு தேவையானவற்றை வாங்கி கொடுத்து மகிழ்ச்சியில் ஆழ்த்துவீர்கள். பெண்கள் விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். ஆன்மீக பயணம் செல்வதில் விருப்பம் உண்டாகும். மாணவர்கள் புத்தி சாதூரியத்துடன் நடந்து கொண்டு  மற்றவர்களின் பாராட்டை பெறுவீர்கள்.

 பரிகாரம்: தக்ஷிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அஞ்சு வண்ணப் பூவே... அனன்யா!

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!

வெள்ளி நகைகளை வைத்து இனி கடன் பெறலாம்! முழு விவரம்

குழந்தைகளுக்கு விருது இல்லையா? பிரகாஷ் ராஜிடம் 12 வயது குழந்தை நட்சத்திரம் காட்டம்!

இன்றும் விலை குறைந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT