மாதப் பலன்கள் 
தமிழ் மாதப் பலன்கள்

ஐப்பசி மாதப் பலன்கள் - சிம்மம்

எப்படி இருக்கும் இந்த மாதம்..

ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன்

கிரகநிலை:

ராசியில் கேது - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன் - தைரிய வீர்ய ஸ்தானத்தில் செவ்வாய், புதன் - களத்திர ஸ்தானத்தில் சனி (வ), ராஹூ - விரைய ஸ்தானத்தில் குரு என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றம்:

18.10.2025  அன்று  சூரியன்  தன  வாக்கு  குடும்ப  ஸ்தானத்தில்  இருந்து  தைரிய  வீரிய  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.      

27.10.2025 அன்று  தைரிய வீரிய  ஸ்தானத்தில்  இருந்து  செவ்வாய்   சுக ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

03.11.2025 அன்று  தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில்  இருந்து  சுக்ரன் தைரிய வீரிய  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

பலன்:

முடிவுகளை சுமூகமாக்கும் சிம்ம ராசி அன்பர்களே, இந்த மாதம் லாபகரமாகவும் இருக்கும். பணவரத்து அதிகரிக்கும். செயல்திறன் மேலோங்கும். இழுபறியாக இருந்த ஒரு சில விஷயங்கள் நல்ல முடிவுக்கு வரும். வீடு, வாகனங்கள் வாங்கும் நிலை உருவாகும்.

தொழில், வியாபாரம் முன்னேற்றம் காணப்படும். விவசாயம், ரியல் எஸ்டேட் தொழில் லாபம் தரும். வியாபார வளர்ச்சிக்கு புதிய திட்டங்களை தீட்டுவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிலுவையில் உள்ள பணம் கைக்கு கிடைக்கும். பயணங்களால் லாபம் கிடைக்கும்.

குடும்பத்தில் தாய்வழி உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்க பெறும். கணவன், மனைவிக்கிடையே  நெருக்கம் அதிகரிக்கும். உயர்ந்த ஆடை ஆபரணங்கள் சேரும். நல்லது கெட்டது அறிந்து செயல்பட்டு நன்மை கிடைக்க பெறுவீர்கள். பணவசதி கூடும். குழந்தைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். அவர்களிடம் அன்பு அதிகரிக்கும்.

பெண்களுக்கு மனதில் மகிழ்ச்சி உண்டாகும்படியான சூழ்நிலை உண்டாகும். வெளியூர் பயணம் செல்ல நேரலாம்.

மாணவர்களுக்கு எதையும் அவசரமாக செய்யாமல் யோசித்து செயல்படுவது நல்லது. கல்வியை பற்றிய கவலை குறையும்.

கலைத்துறையினருக்கு அனைத்து வகையிலும் நன்மைகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த சுணக்க நிலை மாறும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நன்மை தரும்.

அரசியல் துறையினருக்கு எடுக்கக் கூடிய ஒப்பந்தகளை நன்றாக ஆராய்ந்து முடிவுக்கு வரவேண்டும். வெளிநாட்டு ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். லாபம் பெருகும். மேலிடத்தின் கனிவான பார்வை கிடைக்கப் பெறுவீர்கள்.

மகம்:

இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். கடன் பிரச்சனை தீரும். ஆர்டர்பிடிப்பதில் இருந்த கஷ்டம் குறையும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் எளிதாக பணிகளை செய்து முடிப்பார்கள்.  மேல் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

பூரம்:

இந்த மாதம் பாதியில் நின்ற வீடுகட்டும் பணியை மீண்டும் தொடருவீர்கள். சிலர் புதிய வீட்டிற்கு குடிபுகுவார்கள். கணவன் மனைவிக்கிடையில் திடீரென்று கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகள் கல்வியில் முன்னேற்றம் அடைய தேவையான உதவிகளை செய்வீர்கள்.

உத்திரம் 1ம் பாதம்:

இந்த மாதம் மற்றவர்களிடம் கவனமாக பேசுவது கருத்து வேற்றுமை வராமல் தடுக்கும். வீண் அலைச்சல் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும். விளையாட்டு போட்டிகளில்  பங்கேற்கும் போது கவனம் தேவை.

பரிகாரம்: சிவனை வணங்க எதிர்ப்புகள் விலகும். மன குழப்பம் நீங்கும். கடன் பிரச்சனை குறையும்.

சந்திராஷ்டம தினங்கள்: நவ 2, 3, 4

அதிர்ஷ்ட தினங்கள்: அக் 26, 27, 28

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்தில் விவசாய பண்ணை தொழிலாளி மரணம்

ஆட்டோ ஓட்டுநருக்கு கத்திக்குத்து

நடிகை மனோரமா மகன் பூபதி காலமானாா்

காஞ்சிபுரத்தில் 51 ஏரிகள் நிரம்பின: விவசாயிகள் மகிழ்ச்சி

விமானம், மெட்ரோ, ரயில், சாலை போக்குவரத்தை ஏரோசிட்டி ஒருங்கிணைக்கும்

SCROLL FOR NEXT