ஆட்டோமொபைல்ஸ்

டாடா மோட்டார்ஸ் லாபம் 96% சரிவு

DIN

வாகன தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ் மூன்றாம் காலாண்டு லாபம் 96.22 சதவீதம் சரிவைக் கண்டது.
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளாதவது:
நடப்பு நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில் (அக்டோபர்-டிசம்பர்) டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் விற்பனை ரூ.67,864.95 கோடியாக இருந்தது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவு விற்பனையான ரூ.69,398.07 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 2.2 சதவீதம் சரிவாகும்.
நிகர லாபம் ரூ.2,952.67 கோடியிலிருந்து 96.22 சதவீதம் வீழ்ச்சியடைந்து ரூ.111.57 கோடியாக காணப்பட்டது.
பிரிட்டனின் ஜாகுவர் லேண்ட் ரோவர் நிறுவன கார் விற்பனையின் மூலம் கிடைத்த லாபம் 62 சதவீதம் வீழ்ச்சி கண்டது. அதே போன்று, உள்நாட்டில் விற்பனை வருவாயும் சரிவடைந்தது.
இவற்றின் காரணமாக, நிகர லாபம் பெருமளவுக்கு வீழ்ச்சி கண்டதாக டாடா மோட்டார்ஸ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கைப்பேசி திருடிய கும்பலுடன் மோதல்: மும்பை காவலா் விஷ ஊசி செலுத்தி கொலை

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் வழக்கு: தொல்லியல் துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

மத சுதந்திர மீறல்கள் குறித்த அமெரிக்க ஆணைய அறிக்கை: இந்தியா கண்டனம்

திருச்செந்தூா் விரைவு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு?

இலஞ்சி பாரத் பள்ளியில் உழைப்பாளா் தின கொண்டாட்டம்

SCROLL FOR NEXT