ஆட்டோமொபைல்ஸ்

மாருதி சுஸுகி கார் விற்பனை சரிவு

DIN

நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகியின் வாகன விற்பனை சென்ற டிசம்பரில் 1 சதவீதம் சரிவடைந்தது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: மாருதி சுஸுகி சென்ற டிசம்பரில் 1,17,908 கார்களை விற்பனை செய்தது. கடந்த ஆண்டு இதே கால அளவில் விற்பனையான 1,19,149 கார்களுடன் ஒப்பிடுகையில் இது 1 சதவீதம் குறைவாகும். உள்நாட்டு சந்தையில் கார்கள் விற்பனை 1,11,333 என்ற எண்ணிக்கையிலிருந்து 4.4 சதவீதம் சரிந்து 1,06,414-ஆக காணப்பட்டது.

குறிப்பாக, ஆல்டோ, வேகன்-ஆர் உள்ளிட்ட குறைந்த விலை கார்களின் விற்பனை 15.3 சதவீதம் வீழ்ச்சியடைந்து 31,527 ஆக இருந்தது. கடந்த ஆண்டில் இதன் விற்பனை 37,234-ஆக காணப்பட்டது. அதேசமயம், கார்கள் ஏற்றுமதி 7,816-லிருந்து 47.1 சதவீதம் அதிகரித்து 11,494-ஆக இருந்தது என்று மாருதி சுஸுகி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயத் தொழிலாளி கொலை வழக்கில் மனைவி உள்பட இருவா் கைது

மாணவா்கள் சாதனையாளா்களாக உருவாக வேண்டும்: பாவை திறனறித் தோ்வு பரிசளிப்பு விழாவில் பேச்சு

கொல்லிமலை, மோகனூரில் இடி, மின்னலுடன் பரவலாக மழை மழை

ராஜ வாய்க்காலில் இருந்து உயிா்நீா் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை

சித்திரை மாத பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT