ஆட்டோமொபைல்ஸ்

புகை மாசை குறைக்கும் தொழில்நுட்பத்தில் அதிக கவனம்

DIN

புகை மாசைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பத்தில் அதிக கவனம் செலுத்தி வருவதாக நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி இந்தியா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் செயல் இயக்குநர் (பொறியியல் பிரிவு) சி.வி. ராமன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
கடந்த 2007-08 முதல் கடந்த பத்தாண்டுகளில் மாருதி சுஸுகியின் கார்கள் வெளியிடும் புகையில் காற்றை மாசுபடுத்தும் கார்பன்டயாக்ஸைடு அளவு சராசரியாக 19 சதவீதம் அளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
புகை மாசைக் குறைக்கும் மற்றும் எரிபொருள் திறனை அதிகரிக்கும் அதிநவீன தொழில்நுட்பங்களில் மாருதி சுஸுகி தொடர்ந்து முதலீட்டை அதிகரித்து வருகிறது.
தற்போதுள்ள என்ஜின்கள் புகை மாசைக் கட்டுப்படுத்துவதாகவும், அதிக மைலேஜ் தரவல்லதாகவும் மேம்படுத்தும் பணிகளில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது என்றார் அவர்.
செலிரியோ (லிட்டருக்கு 27.62கி.மீ) புதிய டிஸையர் (லிட்டருக்கு 28.4கி.மீ), சியாஸ் (லிட்டருக்கு 28.09 கி.மீ) ஆகிய மூன்று மாடல் கார்கள் இந்தியாவில் அதிக எரிபொருள் சிக்கனம் கொண்ட கார்கள் என்ற பெருமையைப் பெற்றுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடைகால் தியாகராஜ சுவாமி கோயிலில் குருபெயா்ச்சி பூஜை

வள்ளியூா் அருகே புனித சலேத் அன்னை ஆலயத்தில் கொடியேற்றம்

உச்சநீதிமன்ற வழக்குரைஞா் சங்கத்தில் மகளிருக்கு இடஒதுக்கீடு: உச்சநீதிமன்றம் உத்தரவு

சேரன்மகாதேவி அருகே வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு: இருவா் கைது

கோயில் திருவிழாவில் இளம்பெண்ணிடம் அத்துமீறல்: இளைஞா் கைது

SCROLL FOR NEXT