ஆட்டோமொபைல்ஸ்

ஆடி நிறுவனத்தின் ஏ-5 ரக கார்கள்

DIN

ஆடி நிறுவனத்தின் புதிய ஏ-5 "பிராட்பேக்' கார்கள் கோவையில் சனிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆடி நிறுவனம் ஏ5 "பிராட்பேக்' ரகத்தைச் சேர்ந்த ஏ5 ஸ்போர்ட் பேக், ஏ5 கேப்ரியோலெட், எஸ் 5 ஸ்போர்ட் பேக் ஆகிய கார்களை அறிமுகப்படுத்தியுள்ளது. 
கோவையில் இந்த கார்களை அறிமுகப்படுத்திய கோவை ஆடி நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் எஸ்.கே.அருண், பொது மேலாளர் (விற்பனை) விவேக் ஆகியோர் இதுகுறித்து மேலும் கூறியதாவது:
பந்தய கார்களை போன்ற தோற்றம் கொண்ட இவற்றில் அலுமினியம் அலாய் சக்கரங்கள், அதிக ஒளி தரும் எல்.இ.டி. முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. தேவைக்கு ஏற்ப மாற்றி அமைத்துக் கொள்ளக் கூடிய இருக்கைகள், 2.0 லிட்டர் டிடிஐ என்ஜின், 7.9 நொடிகளில் மணிக்கு 100 கி.மீ. வேகத்தை எட்டக் கூடிய அதிநவீன என்ஜின் உள்ளிட்ட வசதிகள் இந்த மாடல்களில் உள்ளன. ஸ்போர்ட் பேக் கார் விற்பனையக விலை ரூ. 54 லட்சம் முதல் உள்ளது. கேப்ரியோலெட் ரூ. 67.51 லட்சம் முதல் விலையுள்ளது. எஸ்5 ஸ்போர்ட் பேக் விற்பனையக விலை ரூ. 70.60 லட்சம் என தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

SCROLL FOR NEXT