ஆட்டோமொபைல்ஸ்

மாருதி சுஸூகியின் புதிய டிசையர்: ஐந்தரை மாதங்களில் 1 லட்சம் கார் விற்பனை

DIN

மாருதி சுஸூகி இந்தியாவின் புதிய டிசையர் கார் விற்பனை அறிமுகம் செய்யப்பட்ட ஐந்தரை மாதங்களில் 1 லட்சத்தை தாண்டி சாதனை படைத்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் செயல் இயக்குநர் (சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனை) ஆர்.எஸ். கல்ஸி தெரிவித்ததாவது:
மேம்படுத்தப்பட்ட புதிய டிசையர் கடந்த மே மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. வெறும் ஐந்தரை மாதங்களில் அதன் விற்பனை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது சாதனையாகும். இன்றைய இளம் தலைமுறை வாடிக்கையாளர் விரும்பும் வகையிலான காரை தயாரித்து வழங்குவதில் நிறுவனத்தின் வெற்றியை இது எடுத்துக்காட்டுகிறது. 
கடந்த ஏப்ரல் - செப்டம்பர் காலத்தில் டிசையர் வாடிக்கையாளர்களில் ஆட்டோ கியர் ஷிப்ட் (ஏஜிஎஸ்) தொழில்நுட்பத்தை 17 சதவீதம் பேர் ஏற்றுக் கொண்டுள்ளனர். இது சந்தையில் அதற்குண்டான வரவேற்பை பிரதிபலிப்பதாக உள்ளது.
புதிய டிசையர் கார் விற்பனை அதிகரிப்புக்கு எரிபொருள் சிக்கனமும் ஒரு முக்கிய காரணம். டீசலில் இயங்கும் டிசையர் லிட்டருக்கு 28.4 கி.மீ.யும், பெட்ரோலில் இயங்கும் கார் 22 கி.மீ.யும் வழங்குவது அவற்றின் தனிச்சிறப்பு என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

வேளாண் கல்லூரியில் குரூப் 1 தோ்வுக்கான வழிகாட்டல்

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

மும்பை சிட்டி எஃப்சி சாம்பியன்

SCROLL FOR NEXT