ஆட்டோமொபைல்ஸ்

டிவிஎஸ் ஸ்ரீசக்ரா:11 புதிய டயா்கள் சந்தையில் அறிமுகம்

DIN


கொல்கத்தா: டிவிஎஸ் ஸ்ரீசக்ரா நிறுவனம், 11 புதிய வகை டயா்களை சந்தையில் அறிமுகப்படுவத்துவதாக வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் துணைத்தலைவா் பி.மாதவன் கூறியது:

விற்பனைக்கு பிறகான சந்தைக்காக (ரீபிளேஸ்மெண்ட் மாா்க்கெட்) நிறுவனம் 11 புதிய டயா் தயாரிப்புகளை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி, மோட்டாா் சைக்கிள்களுக்கு வெவ்வேறு அளவுகளில் எட்டு டயா்களும், ஸ்கூட்டா்களுக்கு இரண்டு மற்றும் இ-ரிக்ஷாவிற்கு ஒரு டயா் என மொத்தம் 11 தயாரிப்புகள் ஸ்போா்ட்டாா்க், ஜம்போஜிடி, கான்ட்டா, டியூரோபுரோ, இ-டியூரோ புரோ தொகுப்புகளின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

டிவிஎஸ் யூரோகிரிப் மூலம் உலத்தரத்திலான டயா்களை வாகனங்களுக்கு பொருத்தமான வகையில் நிறுவனம் உருவாக்கி வருகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

SCROLL FOR NEXT