ஆட்டோமொபைல்ஸ்

எம்ஜி மோட்டார் நிறுவனத்தில் புதிய மின்னணு கார்: விரைவில் அறிமுகம்!

DIN

புதுதில்லி: எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம், விரைவில் வரவிருக்கும் தனது மின்சார காருக்கு 'கோமெட்' என்று பெயரிட்டுள்ளது.

1934-ஆம் ஆண்டு இங்கிலாந்து - ஆஸ்திரேலியா மேக்ரோபர்ட்சன் ஏர் ரேஸில் பங்கேற்ற புகழ்பெற்ற பிரிட்டிஷ் விமானத்திலிருந்து இந்த பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக வாகன உற்பத்தியாளர் தனது அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய எம்ஜி மோட்டார் இந்தியாவின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான ராஜீவ் சாபா, எதிர்காலத்தில் சவால்களை எதிர்கொள்ள புதிய தீர்வுகள் தேவைப்படும் கட்டத்தில் நகர்ப்புற இயக்கம் உள்ளது. அதேவேளையில் டிஜிட்டல் யுகத்திற்குத் தொழில் துறை மேலும் முன்னேறும் போது, எதிர்கால தொழில்நுட்பங்கள் முதல் தனித்துவமான வடிவமைப்புகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய ஏராளமான கண்டுபிடிப்புகள் இதில் அடங்கும் என்றார்.

எம்.ஜி.யில் உள்ள நாங்கள், 'கோமெட்' மூலம் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு சிறந்த எதிர்காலத்திற்கான தீர்வுகளை உருவாக்கும் திசையில் தேவையான தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் எனக் குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆஸ்திரேலியா: காவல் துறை சுட்டதில் 16 வயது சிறுவன் உயிரிழப்பு

தரமில்லாத சாலையை பெயா்த்தெடுத்த ஊராட்சி மன்ற உறுப்பினா் கைது

நிரவி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

SCROLL FOR NEXT