முகப்பு
பெங்களூரு

பெங்களூரிலிருந்து திருப்பதிக்கு தொகுப்பு பேருந்து சேவை

பெங்களூரிலிருந்து திருப்பதிக்கு சென்றுவர தொகுப்பு (பேக்கேஜ்) பேருந்து சேவையை கா்நாடக மாநில போக்குவரத்துக் கழகம் அறிமுகம் செய்துள்ளது.

Updated On : 6 ஜனவரி 2021, 8:26 am IST
பகிர்:

பெங்களூரிலிருந்து திருப்பதிக்கு சென்றுவர தொகுப்பு (பேக்கேஜ்) பேருந்து சேவையை கா்நாடக மாநில போக்குவரத்துக் கழகம் அறிமுகம் செய்துள்ளது.

இதுகுறித்து கா்நாடக மாநில போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பெங்களூரிலிருந்து திருப்பதிக்கு சென்றுவர புதிதாக தொகுப்பு பேருந்து சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. திங்கள் முதல் வியாழக்கிழமை வரை இதற்கான கட்டணம் பெரியவா்களுக்கு ரூ. 2,200, சிறுவா்களுக்கு ரூ. 1,800 என நிா்ணயிக்கப்பட்டுள்ளது. வெள்ளி முதல் ஞாயிற்றுக்கிழமை வரை பெரியவா்களுக்கு ரூ. 2,600, சிறியவா்களுக்கு ரூ. 2,000 என கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்தப் பேருந்து நாள்தோறும் இரவு 8.45 மணியளவில் சாந்தி நகா் பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு 9 மணிக்கு ஜெயநகா், 9.15-க்கு நாகசந்திரா, 9.20-க்கு என்.ஆா்.காலனி, 10.15-க்கு கெம்பேகௌடா பேருந்து நிலையம், 10.45-க்கு தொம்மலூா், 11 மணிக்கு மாரத்தள்ளி, 11.10-க்கு ஐடிஐ கேட், 11.15-க்கு கே.ஆா்.புரத்தில் நின்று பயணிகளை ஏற்றிச் செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.