புத்தக வெளி

ஹேண்ட் மேட் இன் இந்தியா - கிராஃப்ட்ஸ் ஆஃப் இந்தியா (Hand made in india - Crafts of india) (நூல் அறிமுகம்)

தினமணி இணையதளத்தின் லைஃப்ஸ்டைல், லைப்ரரி பிரிவில் புத்தக விமர்சனத்துக்காக வித்யாசமான புத்தகங்களைப் பற்றி இணையத்தில் தேடிக் கொண்டிருக்கும் போது லட்டு போல அதே புத்தகத்தின் பிடிஎஃப் வடிவம் கண்ணில் பட்டது

கார்த்திகா வாசுதேவன்

ஓவியர் பெனிட்டா, தனது நண்பர் வீட்டில் பார்த்த  "Handmade  in  india " என்ற புத்தகம் பற்றிய தகவலை சில ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்த விகடனில் 'வாங்கிய பொருள்' எனும் தலைப்பில் பகிர்ந்திருந்தார்.
 
தமிழ்நாட்டில் சிலைக்கு சுவாமி மலை பிரசித்தி, கோரைப்பாய்களுக்குப் பத்தமடை பிரசித்தி, சிலைகளுக்கு மாமல்லபுரம் பிரசித்தி என்பது போல ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு பூர்வீகம் இருக்கும்... அப்படி இந்தியா முழுதும் பாரம்பரிய முக்கியத்துவம் உள்ள பொருட்களை, அந்தப் பொருட்களுக்கான பூர்வீக இடங்களில் எப்படித் தயாரிக்கிறார்கள், அவை எங்கெங்கே கிடைக்கும் என்ற வரைபடங்களுடன் அந்தப் புத்தகத்தில் விளக்கி இருக்கிறார்கள்.
 
புத்தகத்தின் விலை ரூ 3,170.
 
அந்தப் புத்தகத்தை தேடிப் பிடித்து வாங்கிப் படித்த பிறகு தான் தன்னால் அடுத்த வேலையைப் பார்க்க முடிந்ததென்று பெனிட்டா கூறி இருந்தார், அவர் கூறி இருந்ததைப் படித்ததில் இருந்து எனக்கும் கூட அந்தப் புத்தகத்தை உடனே வாங்கிப் படிக்க வேண்டுமென்ற ஆர்வம் அதிகமிருந்தது. ஆனால் 3,170 ரூபாய் கொடுத்து அந்தப் புத்தகத்தை வாங்குவதா? அதில் மேலும் 10, 15 புத்தகங்கள் வாங்கி விடலாமே என்றெல்லாம் யோசித்து விட்டுப் பிறகு அதைப்பற்றி மறந்து விட்டேன். ஏனென்றால், வருடத்துக்கு ஒருமுறை வரும் புத்தகக் கண்காட்சிக்காக நான் ஒதுக்கும் தொகையே 3000க்குள் தான். பிறகு எதற்கு இந்த வெட்டி ஆர்வம் என விட்டு விட்டேன். இன்று தினமணி இணையதளத்தின் லைஃப்ஸ்டைல், லைப்ரரி பிரிவில் புத்தக விமர்சனத்துக்காக வித்யாசமான புத்தகங்களைப் பற்றி இணையத்தில் தேடிக் கொண்டிருக்கும் போது லட்டு போல அதே புத்தகத்தின் பிடிஎஃப் வடிவம் கண்ணில் பட்டது. ஆஹா... பழம் நழுவில் பாலில் விழுந்து அது நழுவி வாயில் விழாத குறை.

புத்தகத்தைப் புரட்டிப் பார்த்ததில் இது நம் ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டிய புத்தகங்களில் ஒன்று என்று தோன்றியது.

அத்தனை அழகாக இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் சிறப்பான கலைநயம் மிக்க பொருட்கள் அத்தனையையும் பட்டியலிட்டு, அவை எங்கே, எந்த மூலையில் கிடைக்கும் என்ற தகவல்களுடன் புத்தகம் அழகுறத் தொகுக்கப்பட்டிருக்கிறது. புத்தகத்தைத் தொகுத்தவர்கள் இந்தியாவை நிலவியல் அடிப்படையில் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு, மத்திய இந்தியா, கிழக்கிந்தியா என 6 பாகங்களாகப் பிரித்துக் கொண்டு அந்தந்தப் பாகங்களில் அமையும் மாநிலங்களின் எக்ஸ்க்ளூசிவ்வான கைவினைப் பொருட்கள் அனைத்தையும் அழகுறப் பட்டியலிட்டு விளக்கியிருக்கிறார்கள். கலையார்வம் மிக்கவர்கள் நிச்சயம் இந்தப் புத்தகத்தை ஆர்வத்துடன் வாசிக்கக் கூடும்.

புத்தகம் - Hand Made In India
ஆசிரியர் - அதிதி ரஞ்சன், M P ரஞ்சன்
பக்கங்கள் - 576
விலை - 3,170 ரூபாய்
பதிப்பகம் - Mapin publishing pvt ltd.
 
புத்தகத்தை பிடிஎஃப் ஆக வாசிக்க விருப்பமிருப்பவர்களுக்கான லிங்க்...

http://www.cohands.in/handmadepages/book1.asp?t1=1&lang=English

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

வைல்ட் ஃபிளவர்... அமைரா தஸ்தூர்!

நயினார் நாகேந்திரனை ஓபிஎஸ் குற்றம் சொல்வதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்: தமிழிசை

மேட்டூரில் ஆடிப்பெருக்கு விழா: புனித நீராட குவிந்த மக்கள்!

நவி மும்பையில் நடனப் பாரை தாக்கி சேதப்படுத்திய நவநிர்மாண் சேனை தொண்டர்கள் !

SCROLL FOR NEXT