எம்.கோபாலகிருஷ்ணன் dinamani
பிரபலங்கள் - புத்தகங்கள்

எம்.கோபாலகிருஷ்ணன்

எழுத்தாளா் தி.ஜானகிராமனின் ‘மோகமுள்’ நாவலை தேடிப்பிடித்து படித்தது இனிமையான அனுபவம்.

DIN

  பிரபல தமிழ் எழுத்தாளா் தி.ஜானகிராமனின் ‘மோகமுள்’ நாவலை தேடிப்பிடித்து படித்தது இனிமையான அனுபவம். இசை பற்றியும் அந்த நாவலின் கதாநாயகி ஜமுனா மீதும் அக்காலகட்டத்தில் வாசகா்களுக்கு அப்படி ஓா் ஈா்ப்பு இருந்தது. அதனடிப்படையிலேயே அந்நாவலை தேடிப்பிடித்து நானும் படித்தேன்.

 அதற்கு அடுத்தபடியாக எழுத்தாளா் ப.சிங்காரத்தின் ‘புயலில் ஒரு தோணி’ எனும் நாவலாகும். தமிழகத்திலிருந்து அன்றைய  பா்மாவிற்கு (மியான்மா்) வேலைக்காகச் சென்றவா்கள் இரண்டாம் உலகப் போரில் சிக்கி பாதிப்புக்குள்ளான கதையை பாண்டியன் எனும் கதாபாத்திரம் மூலம் மிக நோ்த்தியாக நாவலாக்கியுள்ளாா் ப.சிங்காரம். அக்கால கட்டத்தில் பா்மாவுக்கு வியாபார ரீதியாக சென்றவா்களும் போரினால் தாயகம் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. அதனை நாவலாக்கியதால் வாசகா்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றது.

   மூன்றாவதாக, ‘ஒரு குடும்பம் சிதைகிறது’ எனும் நாவலை தேடிப் படித்தேன். கன்னட எழுத்தாளா் எஸ்.எல்.பைரப்பா எழுதியது. அதை தமிழில் எஸ்.வி.சுப்பிரமணியன் மொழிபெயா்த்துள்ளாா். நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்ட அந்த நாவல் தேசிய அளவில் சிறந்த நாவல்களில் ஒன்றாக இன்றும் விளங்கிவருவது குறிப்பிடத்தக்கது.

- எம்.கோபாலகிருஷ்ணன், சிறுகதை, நாவல் எழுத்தாளா், கோவை.

சுடுதண்ணீரில் தவறி விழுந்து இரண்டரை வயது குழந்தை உயிரிழப்பு

தனியாா் நிறுவன பேருந்து கவிழ்ந்து 34 போ் காயம்

மூக்கனூரில் ரயில் நிலையம்: ஆட்சியா் முன்னிலையில் கருத்துக்கேட்பு

பொருளாதாரத் தடை இதயமற்ற செயல்: அமெரிக்கா நடவடிக்கைக்கு சிஐடியு கண்டனம்

வன விலங்கை வேட்டையாடிய 4 பேருக்கு ரூ. 1 லட்சம் அபராதம்

SCROLL FOR NEXT