தமிழக பட்ஜெட்

விழுப்புரத்தில் மீன்பிடி துறைமுகம்; தூத்துக்குடியில் மிளகாய் மையம்

DIN

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த பட்ஜெட்டில் கூறப்பட்டிருப்பதாவது, 
சேலம் புத்தரகவுன்டன்பாளையம், உமையாள்புரம் ஆகிய இடங்களில் புதிதாக சிப்காட் தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும்.

விழுப்புரம் அழகன்குப்பம், செங்கல்பட்டு ஆலம்பரைக் குப்பத்தில் மீன்பிடித்துறைமுகம் அமைக்க ரூ.235 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்காசியில் எலுமிச்சை மையம், தூத்துக்குடியில் மிளகாய் மையம் ஏற்படுத்தப்படும்.

திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டானில் ரூ.77.94 கோடி செலவில் உணவுப்பூங்கா அமைக்கப்படும்.

திருந்திய நெல்சாகுபடி முறை 27.18 லட்சம் ஏக்கர் பரப்பளவுக்கு விரிவுபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் புதிய குளங்களை ஏற்படுத்துதல், நீர் நிலைகளைப் பராமரித்தல் உள்ளிட்ட பாசன வசதிகளுக்கு ரூ.655 கோடி ஒதுக்கப்படும் என்றும் பன்னீர்செல்வம் அறிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நெல்லை பழமொழிகள்’ நூல் வெளியீடு

நெல்லையில் நீரில் மூழ்கி தொழிலாளி பலி

நெல்லை நீதிமன்றம் ராக்கெட் ராஜாவுக்கு ஜாமீன்

நெல்லையில் 106.1 டிகிரி வெயில்

களக்காடு மீரானியா பள்ளி 98% தோ்ச்சி

SCROLL FOR NEXT