வர்த்தகம்

மாருதி சுஸுகி கார் விற்பனை 12% வளர்ச்சி

தினமணி

நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகியின் கார்கள் விற்பனை சென்ற நவம்பரில் 12.2% அதிகரித்தது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
மாருதி சுஸுகி சென்ற நவம்பரில் 1,35,550 கார்களை விற்பனை செய்தது. கடந்த ஆண்டு இதே கால அளவில் விற்பனையான 1,20,824 கார்களுடன் ஒப்பிடுகையில் இது 12.2 சதவீத வளர்ச்சியாகும்.
உள்நாட்டில் கார்கள் விற்பனை 1,10,599 என்ற எண்ணிக்கையிலிருந்து 14.2 சதவீதம் அதிகரித்து 1,26,325-ஆக இருந்தது. அதே சமயம், வெளிநாடுகளுக்கான கார்கள் ஏற்றுமதி 10,225-லிருந்து 9.8 சதவீதம் சரிவடைந்து 9,225-ஆக காணப்பட்டது.
ஆல்டோ, வேகன்-ஆர் உள்ளிட்ட குறைந்த விலை பிரிவிலான கார்கள் விற்பனை 8.1 சதவீதம் உயர்ந்து 38,886-ஆகவும், ஸ்விப்ட், எஸ்டிலோ, ரிட்ஸ், டிசையர், பலேனோ கார்கள் விற்பனை 10.3 சதவீதம் அதிகரித்து 49,431-ஆகவும் இருந்தது என்று மாருதி சுஸுகி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் கனரக வாகனங்கள்!

வரப்பெற்றோம் (29-04-2024)

ஏன் கவர்ச்சி? மாளவிகா மோகனன் பதில்!

நடிகர் படத்தின் டிரெய்லர்

ரேவந்த் ரெட்டி ஆஜராக தில்லி போலீஸ் சம்மன்!

SCROLL FOR NEXT