வர்த்தகம்

பங்குச் சந்தைகளுக்கு ஏற்றமான வாரம்

DIN

இந்திய பங்குச் சந்தைகளுக்கு கடந்த வாரம் ஏற்றமானதாக அமைந்தது.
ஜப்பான் மற்றும் அமெரிக்காவின் மத்திய வங்கி கூட்டம் கடந்த வாரம் நடைபெற்ற சூழலில் வட்டி விகிதங்கள் உயர்த்தப்படும் என்ற நிலைப்பாட்டால் முதலீட்டாளர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக பங்குச் சந்தைகளில் மந்த நிலை நிலவியது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட ஏற்ற இறக்கமும் பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை உண்டாக்கியது.
ஜப்பான் மற்றும் அமெரிக்க நாடுகளின் மத்திய வங்கிகள் கடனுக்கான வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை என்று அறிவித்தவுடன் பங்கு வர்த்தகத்தில் விறுவிறுப்பு ஏற்பட்டது.
இருப்பினும், லாப நோக்கம் கருதி முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனை செய்ததையடுத்து, பங்குச் சந்தைகள் மிதமான அளவிலேயே ஏற்றம் கண்டன.
உலோகத் துறை நிறுவனப் பங்குகளின் விலை சராசரியாக 3.46 சதவீதம் அதிகரித்தது. எண்ணெய்-எரிவாயு (3.08%), வீட்டு வசதி (1.92%), நுகர்வோர் சாதனங்கள் (1.42%), மோட்டார் வாகனம் (0.99%) உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலையும் ஏற்றம் கண்டன.
மும்பை பங்குச் சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 69 புள்ளிகள் அதிகரித்து 28,668 புள்ளிகளாக நிலைதத்து. மும்பை பங்குச் சந்தையில் கடந்த வாரத்தில் ரூ.19,360.53 கோடி மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்றது.
தேசிய பங்குச் சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 51 புள்ளிகள் உயர்ந்து 8,831 புள்ளிகளாக நிலைத்தது.
இப்பங்குச் சந்தையில் கடந்த வாரத்தில் ரூ.1,03,707.49 கோடி மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாத்தான்குளம் பரி. ஸ்தேவான் ஆலய பிரதிஷ்டை பண்டிகை

ஆத்தூா்-கீரனூா் கோயிலில் பாலாலயம்

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவா் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

கோவில்பட்டி கி.ரா. நினைவரங்கத்தை மேம்படுத்த வலியுறுத்தல்

ஆத்தூா் அரசுப் பள்ளியில் மேலாண்மைக் குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT