வர்த்தகம்

டிவிஎஸ் மோட்டார் லாபம் 6.8 சதவீதம் அதிகரிப்பு

DIN

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் முதல் காலாண்டு லாபம் 6.8 சதவீதம் அதிகரித்தது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் ஏப்ரல்}ஜூன் காலாண்டில் ரூ.3,799.81 கோடி வருவாய் ஈட்டியது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் வருவாய் ரூ.3,184.35 கோடியாக இருந்தது.
ஜிஎஸ்டி}க்கு முன்பாக ஜூன் 30}ஆம் தேதி வரையில் கையிருப்பில் இருந்த வாகனங்களுக்காக விநியோகஸ்தர்களுக்கு ரூ.16.50 கோடி கூடுதல் தள்ளுபடி வழங்கப்பட்டது.
அதன் காரணமாக, நிகர லாபம் ரூ.121.25 கோடியிலிருந்து 6.8 சதவீதம் மட்டுமே அதிகரித்து ரூ.129.47 கோடியாக இருந்தது.
ஜிஎஸ்டி அமலாக்கத்துக்குப் பிறகு வாகனங்கள் திருத்தியமைக்கப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. எங்களுக்கு உதிரி பாகங்கள் அளித்து வரும் நிறுவனங்கள் அனைத்தும் ஜிஎஸ்டி நடைமுறைக்கு மாறியுள்ளதால் விநியோக சங்கிலித்தொடரில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
மேலும், அனைத்து தயாரிப்புகளின் விலையும் சரியான விகிதத்தில் குறைக்கப்பட்டு ஜிஎஸ்டி யின் பலன்கள் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
வாகனங்களின் விலை மாடல்களுக்கு ஏற்ப ரூ.350 முதல் ரூ.1,500 வரையில் குறைக்கப்பட்டுள்ளது. அதேசமயம், பிரீமியம் பிரிவில் வாகனங்களின் விலை ரூ.4,150 வரை குறைக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் 7.85 லட்சம் இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டன. கடந்த ஆண்டு இதே கால அளவில் விற்பனையான 7.01 லட்சம் வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 12 சதவீதம் அதிகம் என டிவிஎஸ் மோட்டார் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரித்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

வணங்கான் வெளியீட்டு பணிகள் தீவிரம்!

தென்னிந்தியாவில் பாஜகவுக்கு வரவேற்பு; 100 தொகுதிகளில் வெல்லும்: அமித் ஷா

நத்தத்தில் திடீர் தீ விபத்து: ரூ. 40 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம்!

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

SCROLL FOR NEXT