வர்த்தகம்

ஆர்ஜென்டீனா சந்தையில் களமிறங்கிய ஹீரோ மோட்டோகார்ப்

DIN

இருசக்கர வாகன தயாரிப்பில் ஈடுபட்டு வரும் இந்திய நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் "நியூ கிளாமர்' புதிய அறிமுகத்தின் மூலம் ஆர்ஜென்டீனா சந்தையில் கால் பதித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான பவன் முஞ்சால் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது:
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது வர்த்தகத்தை உலக நாடுகளில் பரவலாக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, "நியூ கிளாமர்' 125சிசி புதிய மோட்டார் சைக்கிளை ஆர்ஜென்டீனா சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளோம். ஹீரோ மோட்டோகார்ப்பின் முதல் சர்வதேச அறிமுகம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்ஜென்டீனா மட்டுமின்றி தென் அமெரிக்க நாடுகளின் சந்தைகளும் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் என்பதை உணர்ந்துள்ளோம்.
ஹீரோ மோட்டோகார்ப் மோட்டார் சைக்கிள்களை ஆர்ஜென்டீனாவில் சந்தைப்படுத்தும் உரிமையை மார்வென் பெற்றுள்ளது. இதற்கு, பியூனஸ் அயர்ஸ் நகரம் அமைந்துள்ள வில்லா ரோஸ் மாகாணத்தில் தயாரிப்பு ஆலை உள்ளது. இங்கு, ஆண்டுக்கு 5,000 மோட்டார் சைக்கிள்களை தயாரிக்க முடியும். எதிர்காலத்தில் உற்பத்தி திறனை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்துக்கு ஆர்ஜென்டீனா 35-ஆவது உலக சந்தையாகும்.
புதிய அறிமுகமான "நியூ கிளாமர்' 125 சிசி மோட்டார் சைக்கிள் உலக இளைஞர்களின் விருப்பத்தை மனதில் கொண்டு பாரத் ஸ்டேஜ்-4 சுற்றுச்சூழல் விதிமுறைக்கு பொருந்தும் வகையில் இந்தியாவில் வடிவமைக்கப்பட்டது என்றார் அவர்.
ஹீரோ மோட்டோகார்ப் வரும் 2020-ஆம் ஆண்டுக்குள் சர்வதேச அளவில் 50 புதிய சந்தைகளில் களமிறங்க இலக்கு நிர்ணயித்துள்ளது. மேலும், உலக அளவில் 20 தயாரிப்பு ஆலைகளைத் தொடங்கவும், ஆண்டு விற்றுமுதலை ரூ.60,000 கோடியாக அதிகரிக்கவும் சபதமெடுத்துள்ளது.
2017-ஆம் ஆண்டுக்குள் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அதன் மொத்த விற்பனை வருவாயில் 10 சதவீதத்தை ஏற்றுமதி வாயிலாகப் பெற இலக்கு நிர்ணயித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மருத்துவ காப்பீட்டுக்கான உச்ச வயது வரம்பு நீக்கம்: முழு விவரம்

நிக்கி!

ஒரே குடும்பத்தில் 5 பேருக்காக வீட்டு வாசலில் வாக்குச்சாவடி!

கஞ்சாவுடன் முதல்வரிடம் மனு - பாஜக நிர்வாகியிடம் விசாரணை

மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT