வர்த்தகம்

72 புதிய விமானங்களை வாங்குகிறது கோ-ஏர்!

DIN

குறைந்த கட்டண விமான சேவை அளித்து வரும் பயணிகள் விமான நிறுவனமான கோ-ஏர், 72 புதிய விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. ஏர்பஸ் நிறுவனத்துடன் ஏற்படுத்தியுள்ள ஒப்பந்தத்தின்படி, அதிநவீன ஏ-320 நியோ வகை விமானங்களை கோ-ஏர் நிறுவனம் வாங்க உள்ளது.
ஏற்கெனவே 72 புதிய விமானங்களை வாங்க ஒப்பந்தம் ஏற்பட்டுள்ள நிலையில், மேலும் 72 விமானங்களை வாங்க கோ-ஏர் முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏர்பஸ் நிறுவனத்தின் ஏ-320 நியோ விமானங்கள் எரிபொருள் சிக்கனத்துக்குப் பெயர் பெற்றவை. அதே அளவு திறனுள்ள பிற நிறுவனங்களின் விமானங்களைவிட 15 சதவீத அளவுக்கு எரி பொருள் மிச்சமாகிறது என்று கூறப்படுகிறது. உள் வடிவமைப்புகளில் மாற்றங்கள் கொண்டு வருவதன் மூலம் எரி பொருள் சிக்கனத்தை 20 சதவீதமாக அதிகரிக்கலாம் என்று விமான தொழில்நுட்ப நிபுணர்கள் கூறுகின்றனர்.
வாடியா குழுமத்தைச் சேர்ந்த கோ-ஏர் நிறுவனம், குறைந்த கட்டண பயணிகள் விமான சேவைகளை கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் வழங்கி வருகிறது. தற்போது நாட்டில் சென்னை, புது தில்லி, மும்பை, ஸ்ரீநகர், ஜம்மு, புவனேசுவரம், குவாஹாட்டி, போர்ட் பிளேர் உள்பட 23 நகரங்கள் இடையே சேவை வழங்கி வருகிறது. வாரத்துக்கு 975 விமான சேவைகளை அளித்து வருகிறது இந்நிறுவனம்.
புதிய விமானங்களைக் கையகப்படுத்தியதும் உள்நாட்டு சேவைகள் மற்றும் வெளிநாட்டு சேவைகளை மேலும் விரிவாக்கம் செய்ய உள்ளதாக கோ-ஏர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் உல்ஃப்காங் பிராக்ஷோர் கூறுகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

வடிகாலை ஆக்கிரமித்து கட்டுமானப் பணிகள்: நகா்மன்ற உறுப்பினா் புகாா்

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

SCROLL FOR NEXT