வர்த்தகம்

டி.வி.எஸ். மோட்டார் லாபம் ரூ.132 கோடி

DIN

சென்னையைச் சேர்ந்த டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம் மூன்றாம் காலாண்டில் ரூ.132.67 கோடி நிகர லாபம் ஈட்டியது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
நடப்பு 2016-17 நிதி ஆண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில் டி.வி.எஸ். நிறுவனத்தின் வருவாய் ரூ.3,239.55 கோடியாக இருந்தது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் ஈட்டிய வருவாய் ரூ.3,151.12 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 2.8 சதவீதம் அதிகமாகும்.
நிகர லாபம் ரூ.120.21 கோடியிலிருந்து 10.36 சதவீதம் அதிகரித்து ரூ.132.67 கோடியாக இருந்தது.
மூன்றாவது காலாண்டில் ஏற்றுமதி உள்ளிட்ட ஒட்டுமொத்த இருசக்கர வாகன விற்பனை 6.76 லட்சத்திலிருந்து 4 சதவீதம் வளர்ச்சி அடைந்து 7.03 லட்சமாக இருந்தது. அதேசமயம், மூன்று சக்கர வாகன விற்பனை 26,225 என்ற எண்ணிக்கையிலிருந்து சரிவடைந்து 16,081 என்ற அளவில் இருந்ததாக டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி பள்ளிகளில் பாதியாகக் குறைந்த மாணவர்களின் வருகை!

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

SCROLL FOR NEXT