வர்த்தகம்

வென்ட் இந்தியா வருவாய் 14% அதிகரிப்பு

DIN

முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த வென்ட் இந்தியா நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு வருவாய் 14 சதவீதம் அதிகரித்தது.
இதுகுறித்து அந்த நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
நடப்பு நிதி ஆண்டின் டிசம்பருடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் வென்ட் இந்தியா வருவாய் ரூ.34.95 கோடியாக இருந்தது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் ஈட்டிய வருவாயுடன் ஒப்பிடுகையில் இது 14 சதவீத வளர்ச்சியாகும்.
உள்நாட்டில் விற்பனை 17 சதவீதம் அதிகரித்து 26.92 கோடியாகவும், ஏற்றுமதி 7 சதவீதம் உயர்ந்து 8.03 கோடியாகவும் காணப்பட்டது.
இதையடுத்து, நிகர லாபம் 11 சதவீதம் அதிகரித்து 2.19 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டைப் போலவே ரூ.10 முகமதிப்பு கொண்ட பங்கு ஒன்றுக்கு இடைக்கால ஈவுத்தொகையாக ரூ.10 வழங்க நிறுவனத்தின் நிர்வாகக் குழு பரிந்துரை செய்துள்ளதாக வென்ட் இந்தியா அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

SCROLL FOR NEXT