வர்த்தகம்

மத்திய பட்ஜெட் எதிர்பார்ப்பில் பங்குச் சந்தைகளில் எழுச்சி!

தினமணி

சாதகமான சர்வதேச நிலவரங்கள் மற்றும் மத்திய பட்ஜெட் எதிர்பார்ப்பால் இந்திய பங்குச் சந்தைகள் கடந்த வாரத்தில் எழுச்சி கண்டன.
 மத்திய அரசு பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி சமர்ப்பிக்க உள்ள பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகள் அளிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பால் முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டனர்.
 அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதைத் தொடர்ந்து அந்நாட்டு பங்குச் சந்தைகளும் முன் எப்போதும் காணப்படாத அளவில் 20,000 புள்ளிகளை எட்டி சாதனை படைத்தது.
 இதன் காரணமாக, உலகம் முழுவதுமுள்ள முக்கியப் பங்குச் சந்தைகளிலும் பங்கு வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது. இந்திய பங்குச் சந்தைகளின் ஏற்றத்துக்கு இது மிகவும் உதவிகரமாக அமைந்தது.
 வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களின் பங்குகளில் தொடர்ச்சியாக முதலீட்டை அதிகரித்தன. கடந்த வாரத்தில் வெளிநாட்டு மற்றும் அன்னிய நிதி நிறுவனங்கள் ரூ.1,294.27 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியதாக செபி தெரிவித்தது.
 முதலீட்டாளர்கள் உலோகத் துறை பங்குகளை போட்டிபோட்டு வாங்கியதையடுத்து, அத்துறை நிறுவனப் பங்கின் விலை சராசரியாக 5.93 சதவீதம் அதிகரித்தது.
 மேலும், நுகர்வோர் சாதனத் துறை பங்குகளின் விலை 5.55 சதவீதமும், பொதுத் துறை நிறுவனப் பங்குகளின் விலை 5.46 சதவீதமும், எண்ணெய்-எரிவாயு பங்குகளின் விலை 4.86 சதவீதமும், வங்கி 4.47 சதவீதமும், ஐ.பி.ஓ. 3.75 சதவீதமும் உயர்ந்தன. மின்சாரம் (3.72%), வீட்டு வசதி (2.15%), தொழில்நுட்பம் (1.08%) துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கும் கணிசமான வரவேற்பு காணப்பட்டன.
 நிறுவனங்களைப் பொருத்தவரையில், எச்.டி.எப்.சி. பங்கின் விலை அதிகபட்சமாக 10.72 சதவீதம் ஏற்றத்தைக் கண்டது. இதனைத் தொடர்ந்து, அதானி போர்ட்ஸ் 6.73%, பாரத ஸ்டேட் வங்கி 6.18%, டாடா மோட்டார்ஸ் 4.05%, பஜாஜ் ஆட்டோ 5.51%, மஹிந்திரா & மஹிந்திரா 5.03%, ஆக்சிஸ் வங்கி 4.94%, கெயில் 4.87%, எச்.டி.எப்.சி. வங்கி 4.64%, டாடா ஸ்டீல் 3.22% அதிகரித்தன.
 அதேசமயம், விப்ரோ, இன்ஃபோசிஸ் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளின் விலை இறக்கத்தை சந்தித்தன.
 மும்பை பங்குச் சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 847 புள்ளிகள் (3.14%) அதிகரித்து 27,882 புள்ளிகளாக நிலைத்தது.
 மும்பை பங்குச் சந்தையில் கடந்த வாரம் ரூ.14,237.93 கோடி மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்றது.
 தேசிய பங்குச் சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 291 புள்ளிகள் உயர்ந்து (3.50%) 8,641 புள்ளிகளாக நிலைத்தது.
 தேசிய பங்குச் சந்தையில் கடந்த வாரம் ரூ.92,475.26 கோடி மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்றது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT