வர்த்தகம்

சென்செக்ஸ் 32 புள்ளிகள் சரிவு

DIN

சாதகமற்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிலவரங்களால் மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 32 புள்ளிகள் சரிந்தது.
பொருளாதார ஆய்வறிக்கை, பட்ஜெட் அறிவிப்புகளை எதிர்பார்த்து முதலீட்டாளர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், சில்லறை முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி அதிக அளவில் பங்குகளை விற்பனை செய்தனர்.
அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப் குடியேற்ற விதிமுறைகளில் கடும் கட்டுப்பாடுகளை விதித்தது உலக நாடுகளின் பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்திய பங்குச் சந்தைகளின் சரிவுக்கு இதுவும் முக்கிய காரணமாக அமைந்தது.
மோட்டார் வாகனம், வங்கி, மின்சாரம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் முதலீட்டாளர்களிடையே வரவேற்பை இழந்தது.
நிறுவனங்களைப் பொருத்தவரையில் டாடா மோட்டார் பங்கின் விலை அதிகபட்சமாக 2.18 சதவீதம் சரிவடைந்தது. இதனைத் தொடர்ந்து, டாடா ஸ்டீல் பங்கும் 1.56 சதவீத இறக்கத்தை கண்டது.
இவை தவிர, ஓ.என்.ஜி.சி., எஸ்.பி.ஐ., ஹீரோ மோட்டோகார்ப், பஜாஜ் ஆட்டோ, என்.டி.பி.சி., டி.சி.எஸ்., கோல் இந்தியா, எச்.டி.எப்.சி. வங்கி, ஐ.டி.சி., ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, மஹிந்திரா & மஹிந்திரா, மாருதி சுஸுகி, எச்.யு.எல்., விப்ரோ, அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனப் பங்குகளின் விலையும் சரிவை சந்தித்தன.
அதேசமயம், பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஸன் ஃபார்மா, ஏஷியன் பெயிண்ட்ஸ், இன்ஃபோசிஸ், டாக்டர் ரெட்டீஸ், லூபின், கெயில் மற்றும் எல் & டி நிறுவனப் பங்குகளின் விலை 7.48 சதவீதம் வரை ஏற்றம் கண்டன.
இந்திய செல்லிடப்பேசி வர்த்தகத்தை ஆதித்ய பிர்லா குழுமத்தின் ஐடியா நிறுவனத்துடன் இணைப்பது குறித்து பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளதாக வோடஃபோன் நிறுவனம் தெரிவித்தது.
இதன் காரணமாக, ஐடியா செல்லுலார் பங்கின் விலை 25 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது. மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 32 புள்ளிகள் சரிந்து 27,849 புள்ளிகளாக நிலைத்தது.
தேசிய பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 8 புள்ளிகள் குறைந்து 8,632 புள்ளிகளாக நிலைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

SCROLL FOR NEXT