வர்த்தகம்

பங்குச் சந்தையில் திடீர் எழுச்சி

DIN

சாதகமான உலக நிலவரங்களால் இந்திய பங்குச் சந்தைகள் செவ்வாய்க்கிழமை திடீர் எழுச்சி கண்டன.
அன்னிய நிதி நிறுவன முதலீட்டாளர்கள் இந்திய நிறுவனங்களின் பங்குகளில் தொடர்ச்சியாக முதலீட்டை அதிகரித்தனர். அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மருத்துவ காப்பீட்டு மசோதாவுக்கு ஆதரவு கிடைக்காததைத் தொடர்ந்து அதிபர் டொனால்ட் டிரம்ப் வரி சீரமைப்பு நடவடிக்கைகளை வேகமாக முடுக்கிவிடுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அதன் காரணமாக, சர்வதேச சந்தைகளில் பங்கு வர்த்தகம் சூடுபிடித்து காணப்பட்டது. அதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.
வங்கிகளின் வாராக் கடன் பிரச்னைக்குத் தீர்வு காண மத்திய அரசு புதிய கொள்கைத் திட்டங்களை அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அதன் காரணமாக, வங்கித் துறைப் பங்குகளுக்கு முதலீட்டாளர்களிடையே அமோக வரவேற்பு காணப்பட்டது.
இவை தவிர, மோட்டார் வாகனம், நுகர்வோர் சாதனங்கள், மின்சாரம், மருந்து ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கும் முதலீட்டாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன.
நிறுவனங்களைப் பொருத்தவரையில், ஏஷியன் பெயின்ட்ஸ், ஆக்சிஸ் வங்கி, டாடா மோட்டார்ஸ், எஸ்.பி.ஐ., ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஸன் ஃபார்மா, மஹிந்திரா & மஹிந்திரா, என்.டி.பி.சி., மற்றும் பவர் கிரிட் ஆகிய நிறுவனப் பங்குகளின் விலை 3.23 சதவீதம் வரை ஏற்றம் கண்டன.
பார்தி இன்ஃப்ராடெல் 1.98 சதவீதமும், அரபிந்தோ ஃபார்மா 1.40 சதவீதமும் அதிகரித்தன.
வீட்டு வசதிக் கடன் நிறுவனங்களான எச்.டி.எப்.சி., ஜி.ஐ.சி.ஹவுஸிங், திவான் ஹவுஸிங், எல்.ஐ.சி. ஹவுஸிங் நிறுவனப் பங்குகளின் விலை 1.97 சதவீதம் வரை உயர்ந்தன.
அதேசமயம், ஓ.என்.ஜி.சி., லூபின், ஐ.டி.சி., ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், கோல் இந்தியா மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.
மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 172 புள்ளிகள் அதிகரித்து 29,409 புள்ளிகளாக நிலைத்தது.
தேசிய பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 55 புள்ளிகள் உயர்ந்து 9,100 புள்ளிகளாக நிலைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 5-இல் நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 6,120 போ் எழுதுகின்றனா்

ராஜா வாய்க்காலுக்கு தண்ணீா் திறக்க விவசாயிகள் கோரிக்கை

ரூ. 11.30 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

கணினிவழிக் குற்றங்கள் அதிகரிப்பு: பொதுமக்களுக்கு எஸ்.பி. எச்சரிக்கை

சிபிசில் நிறுவனத்தை கண்டித்து இரண்டாவது நாளாக உண்ணாவிரதம் மூதாட்டி மயக்கம்

SCROLL FOR NEXT