வர்த்தகம்

ரூ.50 லட்சம் கோடி ஏற்றம் கண்ட பங்குகளின் சந்தை மதிப்பு!

DIN

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மத்தியில் பொறுப்பேற்றுக் கொண்டது முதல் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.50 லட்சம் கோடி அதிகரித்துள்ளது.
டாடா, பிர்லா, அம்பானி மற்றும் பஜாஜ் குழுமப் பங்குகளின் சந்தை மதிப்பு தலா ரூ.1 லட்சம் கோடி ஏற்றம் கண்டுள்ளது. முகேஷ்
அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.1 லட்சம் கோடி அதிகரித்து ரூ.4.5 லட்சம் கோடியை எட்டியுள்ளது. அதேபோன்று, அதானி குழும பங்குகளின் சந்தை மதிப்பும் 30 சதவீதம் அதிகரித்து ரூ.1.1 லட்சம் கோடியையும் தொட்டுள்ளது.
பங்குகளின் சந்தை மதிப்பின் ஒட்டுமொத்த ஏற்றமான ரூ.50 லட்சம் கோடியில் பொதுத் துறை நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு 22 சதவீதம் அல்லது ரூ.3.65 லட்சம் கோடியாகமட்டுமே இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆஸ்திரேலியா: காவல் துறை சுட்டதில் 16 வயது சிறுவன் உயிரிழப்பு

தரமில்லாத சாலையை பெயா்த்தெடுத்த ஊராட்சி மன்ற உறுப்பினா் கைது

நிரவி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

SCROLL FOR NEXT