வர்த்தகம்

'சுரங்கத் துறையில் 25 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கலாம்'

DIN

உள்நாட்டில் 25 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திறன் சுரங்கத் துறைக்கு உள்ளது என ஹிந்துஸ்தான் ஸிங்க் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுனில் துகல் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: பல்வேறு சிக்கல்களால் கடந்த 10 ஆண்டுகளாக சுரங்கத் துறையின் வளர்ச்சி பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதன் காரணமாக, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அந்த துறையின் பங்களிப்பு 1.2 சதவீதமாகவே இருந்து வருகிறது. இது மிகவும் ஆபத்தான அறிகுறி.
கடந்த 10 ஆண்டுகளில் சுரங்கத் துறையின் வளர்ச்சி ஒட்டுமொத்த அளவில் 7.3 சதவீத அளவுக்கே உள்ளது. இதே கால அளவில் சீனாவில் இத்துறை 22 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது கவனிக்கத்தக்கது. மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில், சுரங்கத் துறையில் வேலைவாய்ப்பை பெற்றோர் எண்ணிக்கை வெறும் 0.3 சதவீதமாகவே உள்ளது. இந்த எண்ணிக்கை தென் ஆப்பிரிக்காவில் 3.8 சதவீதமாகவும், சிலியில் 1.4 சதவீதமாகவும், சீனாவில் 0.7 சதவீதமாகவும் உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் இந்திய சுரங்கத் துறையில் வேலைவாய்ப்பு வளர்ச்சி என்பது ஆண்டுக்கு 3 சதவீதம் என்ற அளவிலேயே உள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டில் நேரடியாக 30 லட்சம் வேலைவாய்ப்புகளையும், மறைமுகமாக கூடுதலாக 80 லட்சம் வேலைவாய்ப்புகளையும் சுரங்கத் துறை அளித்துள்ளது. 1992-93 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுரங்கத் துறையின் பங்களிப்பு 3.4 சதவீதமாக இருந்தது. பல்வேறு பிரச்னைகளால் இது, 1999-2000 இல் 3 சதவீதமாகவும், 2009-10 இல் 2.3 சதவீதமாகவும் குறைந்து போனது.
சுரங்கத் துறையில் ஏற்படும் ஒவ்வொரு சதவீத வளர்ச்சியின் விளைவாக, தொழில் துறை உற்பத்தி 1.2%-1.4% சதவீதம் வரை ஏற்றம் காணும் . அதேநேரம், மொத்த உள்நாட்டு உற்பத்தியும் 0.3 சதவீத அளவுக்கு உயரும். எனவே, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுரங்கத்துறையின் பங்களிப்பை 7-8 சதவீத அளவுக்கு அதிகரிக்கும் வகையில் இலக்கு நிர்ணயித்து அதற்கு தேவையான நடவடிக்கைகளை துரித கதியில் மேற்கொள்ள வேண்டும். அந்த இலக்கு எட்டப்படும் நிலையில், உள்நாட்டில் சுரங்கத் துறையின் மூலம் 25 லட்சம் வேலைவாய்ப்புகளை கூடுதலாக உருவாக்க முடியும். அதற்கான திறன் சுரங்கத் துறைக்கு உள்ளது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

கர்நாடகத்தில் 20 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும்: சித்தராமையா நம்பிக்கை

கோபால் கிருஷ்ண கோஸ்வாமி மறைவு: மோடி இரங்கல்!

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

SCROLL FOR NEXT