வர்த்தகம்

ஈஐடி பாரி வருவாய் ரூ.644 கோடி

தினமணி

முருகப்பா குழுமத்தின் அங்கமான ஈஐடி பாரி (இந்தியா) நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டு வருவாய் ரூ.644 கோடியாக இருந்தது.
 இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
 ஈஐடி பாரி செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில் செயல்பாடுகள் மூலம் தனிப்பட்ட வருவாயாக ரூ.644 கோடியை ஈட்டியது. கடந்த நிதி ஆண்டில் இது ரூ.579 கோடியாக காணப்பட்டது. வரிக்கு முந்தைய லாபம் ரூ.160 கோடியிலிருந்து சரிந்து ரூ.132 கோடியானது.
 கடந்த 2016-17 நிதி ஆண்டுக்கு துணை நிறுவனமான கோரமண்டல் இண்டர்நேஷனலிடமிருந்து இறுதி ஈவுத் தொகையாக ரூ.89 கோடி பெறப்பட்டது.
 ஏப்ரல்-செப்டம்பர் அரையாண்டில் தனிப்பட்ட வருவாய் ரூ.1,137 கோடியாகவும், வரிக்கு முந்தைய லாபம் ரூ.159 கோடியாகவும் இருந்தது. நிகர லாபம் ரூ.107 கோடியிலிருந்து சரிந்து ரூ.62 கோடியானது.
 சர்க்கரை பிரிவின் செயல்பாடுகளிலிருந்து கிடைக்கும் வரிக்கு முந்தைய லாபம் செப்டம்பர் காலாண்டில் ரூ.50 கோடியிலிருந்து குறைந்து ரூ.31 கோடியானது.
 விவசாய இடுபொருள்கள் பிரிவிலிருந்து கிடைக்கும் வரிக்கு முந்தைய லாபம் ரூ.397 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.571 கோடியானது. பயோ தயாரிப்புகள் பிரிவின் மூலமாக கிடைத்த வரிக்கு முந்தைய லாபம் ரூ.8 கோடியிலிருந்து உயர்ந்து ரூ.10 கோடியானது.
 இதையடுத்து, ஈஐடி பாரி நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாய் செப்டம்பர் காலாண்டில் 9 சதவீதம் அதிகரித்து ரூ.5,115 கோடியாகவும், வரிக்கு பிந்தைய லாபம் ரூ.126 கோடியிலிருந்து உயர்ந்து ரூ.214 கோடியாகவும் இருந்தது.
 செப்டம்பருடன் முடிவடைந்த அரையாண்டில் அனைத்து பிரிவு செயல்பாடுகளின் ஒட்டுமொத்த வருவாய் 10 சதவீதம் அதிகரித்து ரூ.8,493 கோடியாகவும், வரிக்கு பிந்தைய லாபம் ரூ.141 கோடியிலிருந்து உயர்ந்து ரூ.204 கோடியாகவும் இருந்தது என ஈஐடி பாரி நிறுவனம் அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT