வர்த்தகம்

சென்செக்ஸ் 26 புள்ளிகள் அதிகரிப்பு

DIN

மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 26 புள்ளிகள் அதிகரித்தது.
காலையில் பங்கு வர்த்தகம் தொடங்கியதும் அதிக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில், சாதகமான நிலவரங்களால் உள்நாட்டு நிதி நிறுவன முதலீட்டாளர்கள் பங்குகளை ஆர்வத்துடன் வாங்கினர். குறிப்பாக, இன்ஃபோசிஸ் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப துறை பங்குகளுக்கு முதலீட்டாளர்களிடையே வரவேற்பு அதிகரித்து காணப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தொழில்நுட்பம், பொறியியல் சாதனங்கள் துறை நிறுவனப் பங்குகளின் விலை ஏற்றம் கண்டன. அதேசமயம், உலோகம், மோட்டார் வாகனம், அடிப்படை கட்டமைப்பு துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.
இன்ஃபோசிஸ் பங்கின் விலை 2.6 சதவீதமும், ஸன் பார்மா 1.78 சதவீதமும், ரிலையன்ஸ் 1.6 சதவீதமும் அதிகரித்தது. டாக்டர் ரெட்டீஸ் 2.1 சதவீதமும், அதானி போர்ட்ஸ் 1.65 சதவீதமும், பஜாஜ் ஆட்டோ 1.52 சதவீதமும் சரிந்தது. 
மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 26 புள்ளிகள் அதிகரித்து 33,588 புள்ளிகளில் நிலைத்தது.
தேசிய பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 6 புள்ளிகள் உயர்ந்து 10,348 புள்ளிகளாக நிலைத்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

திருவாரூா்-காரைக்குடி பயணிகள் ரயில் தினமும் இயக்கம்

டாஸ்மாக் கடை ஊழியா் மீது தாக்குதல்

மேம்பால தடுப்பின் மீது அரசுப் பேருந்து மோதி 5 போ் காயம்

வணிகா் தின கொடியேற்று விழா

SCROLL FOR NEXT