வர்த்தகம்

சீமென்ஸ் நிறுவனம் லாபம் 74 சதவீதம் சரிவு

DIN

சீமென்ஸ் நிறுவனத்தின் நான்காம் காலாண்டு லாபம் 74.94 சதவீதம் சரிவடைந்தது. 
அக்டோபர்-செப்டம்பர் கால அளவை நிதி ஆண்டாக கொண்டு செயல்பட்டு வரும் அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான நான்காவது காலாண்டில் சீமென்ஸ் நிறுவனத்தின் வருவாய் 2.54 சதவீதம் சரிவடைந்து ரூ.3,204.8 கோடியானது. இதற்கு முந்தைய நிதி ஆண்டில் வருவாய் ரூ.3,288.46 கோடியாக இருந்தது. சொத்துகளை விற்று அசாதாரணமான வகையில் கிடைக்கும் வருவாய் ரூ.2,992.32 கோடியிலிருந்து குறைந்து ரூ.560.3 கோடியானது. இதன் காரணமாக தனிப்பட்ட நிகர லாபம் ரூ.2,489.62 கோடியிலிருந்து 74.94 சதவீதம் சரிந்து ரூ.623.77 கோடியானது. பங்கு ஒன்றுக்கு ரூ.7 ஈவுத் தொகை வழங்குவதாக சீமென்ஸ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

SCROLL FOR NEXT