வர்த்தகம்

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டை குறைத்தது ஃபிட்ச்

DIN

சர்வதேச தரக் குறியீட்டு நிறுவனமான ஃபிட்ச், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டை 6.9 சதவீதமாக குறைத்தது. 
இதுகுறித்து அந்த நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.4 சதவீத அளவுக்கு வளர்ச்சி காணும் என மதிப்பிடப்பட்டிருந்தது. கடந்தாண்டு இறுதியில் அதிரடியாக மேற்கொள்ளப்பட்ட உயர்மதிப்பு கரன்ஸி வாபஸ், ஜிஎஸ்டி அமலாக்க ஆயத்த நடவடிக்கைகளின் எதிரொலியால் பொருளாதார வளர்ச்சி வேகத்தில் எதிர்பாராத விதமாக தடை ஏற்பட்டது. 
இதையடுத்து, ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு தற்போது 6.9 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட நிகழ்வுகளால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கி இரண்டாவது காலாண்டில் பொருளாதார நடவடிக்கைகள் சூடுபிடிக்க அதிக வாய்ப்புள்ளது என ஃபிட்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்தேஷ்காளி சம்பவம் பாஜகவின் திட்டமிட்ட சதி: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்கக் கோரிக்கை

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

SCROLL FOR NEXT