வர்த்தகம்

'வேளாண் உற்பத்தி சாதனை அளவை எட்டும்'

DIN

நடப்பாண்டில் வழக்கமான அளவு பருவமழை இருக்கும் என்ற இந்திய வானிலை மையத்தின் அறிவிப்பு வேளாண் உற்பத்தியில் சாதனை அளவை எட்ட உதவும் என்று வேளாண் துறை செயலர் எஸ்.கே. பட்நாயக் தெரிவித்தார். 
இதுகுறித்து அவர் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
வேளாண் நடவடிக்கைகள் மற்றும் நமது ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு தென்மேற்கு பருவமழை என்பது உயிர்நாடியாக உள்ளது. இந்தியாவில் 50 சதவீத வேளாண் குடிமக்கள் அதனை நம்பியே உள்ளனர். இது தவிர வேளாண் மற்றும் அது சார்ந்த துறைகள் மூலமாக கிடைக்கும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15 சதவீதம் அந்த பருவமழையை மட்டுமே சார்ந்துள்ளது. 
எனவே, தென்மேற்கு பருவமழை குறித்த சாதகமான அறிவிப்பு ஜுனில் தொடங்கும் கரீப் பருவ விதைப்பு பணிகளுக்கு மிகவும் ஊக்கம் தருவதாக இருக்கும். இதனால், நடப்பாண்டில் உணவுப் பொருள்கள் உற்பத்தி 27.75 கோடி டன்னை தாண்டி வரலாற்று சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வள்ளலாா் சா்வதேச மையம் கட்ட எதிா்ப்பு: நாம் தமிழா் கட்சி ஆா்ப்பாட்டம் அறிவிப்பு

கீழ்பவானி கால்வாய் பாசனத்துக்கு நீா் திறக்க வேண்டும்: சீமான்

ஆய்வுக்குப் பிறகே ரேஷனில் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம்: பிரேமலதா கோரிக்கை

பயங்கரவாதத்துக்கு எதிராக சகிப்புத்தன்மை கூடாது: எஸ்சிஓ கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்

பாதுகாப்பான பயண சேவை: அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு

SCROLL FOR NEXT