வர்த்தகம்

இந்தியாபுல்ஸ் ஹவுசிங் லாபம் ரூ.1,030 கோடி

DIN

வீட்டு வசதி தேவைகளுக்கு கடனுதவி அளித்து வரும் இந்தியாபுல்ஸ் நிறுவனம் நான்காம் காலாண்டில் ரூ.1,030 கோடி லாபம் ஈட்டியது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் துணைத் தலைவரும், நிர்வாக இயக்குநருமான ககன் பங்கா கூறியதாவது:
வீட்டு கடனுக்கான தேவை முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை நகரங்களில் வேகமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், புணே நகரங்களில் இதற்கான தேவை வெகுவாக அதிகரித்துள்ளது. இதையடுத்து, சென்ற நிதி ஆண்டின் நான்காவது காலாண்டில் நிறுவனத்தின் லாபம் ரூ.1,030 கோடியாக இருந்தது. 2016-17 நிதி ஆண்டின் இதே கால அளவு நிகர லாபமான ரூ.840 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 23 சதவீதம் அதிகமாகும்.
சென்ற முழு நிதியாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.2,906.4 கோடியிலிருந்து 32.4 சதவீதம் அதிகரித்து ரூ.3,847 கோடியானது. மேலும், கடன்வழங்கும் நடவடிக்கைகளும் ரூ.1,03,705.4 கோடியிலிருந்து 27.2 சதவீதம் உயர்ந்து ரூ.1,31,902.8 கோடியானது. 
நிறுவனம் கடனில் மொத்த வாராக் கடன் விகிதம் 0.85 சதவீதத்திலிருந்து 0.77 சதவீதமாகவும், நிகர வாராக் கடன் விகிதம் 0.36 சதவீதத்திலிருந்து 0.34 சதவீதமாகவும் குறைந்துள்ளன. சென்ற நிதி ஆண்டில் விரிவாக்க நடவடிக்கைகளுக்கு தேவையான ரூ.45,000 கோடியை கடன் சந்தையிலிருந்து திரட்டினோம். இந்த ஆண்டுல ரூ.50,000 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பண பலத்தை பயன்படுத்தி பாஜக வதந்தி பரப்புகிறது: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

வாரணாசியில் பிரதமா் மோடி 14-ஆம் தேதி வேட்புமனு தாக்கல்

அம்மூா் காப்புக் காட்டில் தண்ணீா் தேடி அலையும் விலங்குகள்.. வனத்துறை நடவடிக்கை எடுக்க சமூக ஆா்வலா்கள் கோரிக்கை ...

இந்து மக்கள் கட்சி வேலூா் கோட்ட பொறுப்பாளா்கள் சந்திப்பு

SCROLL FOR NEXT