வர்த்தகம்

தகவல் பயன்பாட்டு சேவைக்காக மத்திய அரசு நிறுவனத்துடன் ஐஓபி ஒப்பந்தம்

தினமணி

பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐஓபி), தகவல் பயன்பாட்டு சேவைக்காக மத்திய அரசின் தேசிய மின் ஆளுமை சேவை நிறுவனத்துடன் (என்இஎஸ்எல்) ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
 இதுகுறித்து அந்த வங்கியின் பொது மேலாளர் ஆர்எம்.ஏ. அழகப்பன் கூறியதாவது:
 திவால் வழக்குகளுக்காக மத்திய அரசு அமைத்த இந்தியாவின் முதல் தகவல் தரும் நிறுவனம் என்இஎஸ்எல் ஆகும். தகவல் பயன்பாட்டு சேவைகளுக்காக இந்த நிறுவனத்துடன் ஐஓபி ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி கடன்கள் மற்றும் கடனை செலுத்த தவறியது குறித்த ஆதாரமான விவரங்களை உயர் தரத்தில் பெறமுடியும். இதன் மூலம், கடன் வழங்குபவர்கள், கடன் பெறுபவர்கள், கடனை திரும்பச் செலுத்துபவர்கள் மற்றும் கடனை செலுத்தத் தவறியவர்கள் குறித்த மேலும் வெளிப்படையான பட்டியலை வங்கி பராமரிக்க முடியும். கடன் வழங்கல் நடவடிக்கைகளில் வங்கிகள் தெளிவான முடிவுகளை எடுக்க இந்த தகவல் பயன்பாட்டு சேவை ஒப்பந்தம் மிகவும் உதவிகரமாக இருக்கும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

SCROLL FOR NEXT