வர்த்தகம்

ஈ.ஐ.டி. பாரி வருவாய் ரூ.3,363 கோடி

DIN


முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த ஈ.ஐ.டி. பாரி (இந்தியா) நிறுவனம் ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் ஒட்டுமொத்த அளவில் ரூ.3,363 கோடி வருவாய் ஈட்டியது. கடந்தாண்டின் இதே கால அளவில் ஈட்டிய வருவாய் ரூ.3,378 கோடியுடன் ஒப்பிடும்போது இது 0.4 சதவீதம் குறைவாகும்.
வரிக்கு முந்தைய லாபம் ரூ.196 கோடியிலிருந்து 58 சதவீதம் சரிந்து ரூ.83 கோடியானது. வரிக்கு பிந்தைய இழப்பு ரூ.9 கோடியிலிருந்து உயர்ந்து ரூ.195 கோடியாக இருந்தது.
தனிப்பட்ட முறையில் ஈ.ஐ.டி. பாரி ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.456 கோடி வருவாய் ஈட்டியது. இது முந்தைய நிதியாண்டின் காலாண்டில் ரூ.474 கோடியாக காணப்பட்டது.
கடந்த நிதியாண்டின் ஜூன் காலாண்டில் ரூ.32 கோடி லாபம் ஈட்டிய நிலையில், நடப்பு நிதியாண்டின் ஜூன் காலாண்டில் நிறுவனத்தின் வரிக்கு முந்தைய இழப்பு ரூ.103 கோடியாக இருந்தது. தனிப்பட்ட வகையில் வரிக்கு பிந்தைய இழப்பு ரூ.15 கோடியிலிருந்து உயர்ந்து ரூ.81 கோடியானது என ஈ.ஐ.டி. பாரி அதன் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT