வர்த்தகம்

பங்குச் சந்தைகளில் கடும் வீழ்ச்சி: சென்செக்ஸ் 572 புள்ளிகள் சரிவு

DIN


சாதகமற்ற நிலவரங்களால் இந்தியப் பங்குச் சந்தைகளில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 572 புள்ளிகள் வீழ்ச்சியைக் கண்டது. 
ஹுவேயின் தலைமை நிதி அதிகாரி மென்ஞ் வன்úஸாகு திடீரென கனடாவில் கைது செய்யப்பட்டதன் எதிரொலியாக சர்வதேச சந்தைகளில் வர்த்தகம் கடும் வீழ்ச்சியை சந்தித்தது. அதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளையும் விட்டுவைக்கவில்லை.
இதைத் தவிர, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு, உற்பத்தி குறைப்பு தொடர்பாக நடைபெறவுள்ள ஒபெக் நாடுகளின் ஆலோசனை கூட்டம், எதிர்வரவுள்ள ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு முதலீட்டாளர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கை உணர்வுடன் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக தொடர்ந்து மூன்றாவது நாளாக பங்குச் சந்தைகள் சரிவுடன் முடிவடைந்தன. 
மாருதி சுஸுகி, டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், யெஸ் வங்கி, அதானி போர்ட்ஸ், பார்தி ஏர்டெல், ஏஷியன் பெயின்ட்ஸ், ஓஎன்ஜிசி, ஹெச்யுஎல், கோட்டக் வங்கி, இன்டஸ்இண்ட் வங்கி, ஆக்ஸிஸ் வங்கி பங்குகளின் விலை 4.63 சதவீதம் வரை சரிந்தன.
அதேசமயம், சன் பார்மா நிறுவனத்துக்கு சந்தையில் வரவேற்பு அதிகரித்து காணப்பட்டதையடுத்து, அந்நிறுவனப் பங்கின் விலை 1.57 சதவீதம் வரை அதிகரித்தன. 
மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 572 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 35,312 புள்ளிகளாக நிலைத்தது. 
தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 181 புள்ளிகள் சரிந்து 10,601 புள்ளிகளில் நிலைத்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

தில்லியில் மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி,ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங் பாஜகவின் நட்சத்திரப் பிரசாரகா்கள்!

SCROLL FOR NEXT