வர்த்தகம்

டிஜிடல் முறையில் விவசாயக் கடன்: பாரத ஸ்டேட் வங்கி திட்டம்

DIN


நவீன மின்னணு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி விவசாயக் கடன்களை வழங்க, இந்தியாவின் முதன்மை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து அந்த வங்கியின் வர்ததகம் மற்றும் மின்னணு வங்கியியல் பிரிவு நிர்வாக இயக்குநர் பி.கே. குப்தா தில்லியில் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
விவசாயக் கடன்களை வழங்குவதில் அதி நவீன மின்னணு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த திட்டமிட்டு வருகிறோம்.
இதுதொடர்பாக, பிற தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து கடன் பட்டுவாடா பணிகளை சோதனை முறையில் மேற்கொண்டு வருகிறோம்.
புதிய முறையில், நிலம் குறித்த விவரங்களும் மின்னணு முறையில் சேகரிக்கப்படும்.
புதிய மின்னணு விவசாயக் கடன் முறையை பாரத ஸ்டேட் வங்கி விரைவில் அறிமுகப்படுத்தும்.
தற்போது, ஏராளமான தகவல் தொழில்நுட்ப நிதி நிறுவனங்கள் (ஃபின்-டெக்) மின்னணு முறையில் கடன்களை வழங்கி வருகின்றன. மாநில அரசுகளும் நில விவரங்களை சேகரித்து வைத்துள்ளன. 
எனவே, இத்தகைய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி விவசாயக் கடன்களை வழங்குவது, விவசாயிகளுக்கும் மிகவும் பயனளிக்கும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

பார்வை ஒன்றே போதுமே... ஸ்ரேயா சரண்!

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

SCROLL FOR NEXT