வர்த்தகம்

சிட்டி யூனியன் வங்கியின் வட்டி வருமானம் ரூ.365 கோடியாக உயர்வு

DIN

சிட்டி யூனியன் வங்கியின் நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் நிகர வட்டி வருமானம் 19 சதவீதம் உயர்ந்து ரூ.365 கோடியாக உள்ளதாக வங்கியின் நிர்வாக இயக்குநர் என்.காமகோடி (படம்) தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் கடந்தாண்டின் காலாண்டைவிட நிகர வட்டி வருமானம் 19 சதவீதம் உயர்ந்து ரூ. 365.14 கோடியாகவும், நிகர லாபம் 22 சதவீதம் உயர்ந்து ரூ. 154.80 கோடியாகவும் இருந்தது. 
நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் வங்கியின் மொத்த வணிகம் கடந்தாண்டைவிட 11 சதவீதம் உயர்ந்து ரூ. 57,428 கோடியாகி உள்ளது. மேலும் வங்கியின் வைப்புத் தொகை மற்றும் கடன்கள் கடந்தாண்டைவிட முறையே 5 சதவீதம், 20 சதவீதம் உயர்ந்து ரூ. 31,339 கோடியாகவும், ரூ. 26,089 கோடியாகவும் இருந்தது. 561 கிளைகள் மற்றும் 1,584 தானியங்கி பணப் பட்டுவாடா இயந்திரங்களுடன் வங்கி செயல்பட்டு வருகிறது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தம்

பைக்குகளுக்கு தீ வைத்தவா் கைது

காவல் நிலையத்தில் மனைவி புகாா்: கணவா் தற்கொலை

கல்லலில் மியோவாக்கி முறையில் மரக்கன்று நடும் விழா

மணல் கடத்தலை தடுக்கக் கோரி பாமக மனு

SCROLL FOR NEXT