வர்த்தகம்

யமஹாவின் முற்றிலும் புதிய 'எஃப்இசட்எஸ்-எஃப்ஐ' பைக் அறிமுகம்

DIN

இந்திய யமஹா மோட்டார் நிறுவனம் 149 சிசி பிரிவில் முற்றிலும் புதிய 'எஃப்இசட்எஸ்-எஃப்ஐ' மாடல் பைக்கை அறிமுகம் செய்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் துணைத் தலைவர் (விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல்) ராய் குரியன் தெரிவித்ததாவது:
தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 'எஃப்இசட்எஸ்-எஃப்ஐ' மாடல் பைக்குகள் அதிகரிக்கப்பட்ட செயல்திறன், மேம்படுத்தப்பட்ட பிரேக்கிங் அமைப்புகளை உள்ளடக்கியது. 149சிசி பிரிவில் இந்த மாடல், ஏர்கூல்டு 4-ஸ்ட்ரோக் என்ஜின், 220எம்எம் ஹைட்ராலிக் பின்புற டிஸ்க் பிரேக்-282எம்எம் முன்புற பிரேக் ஆகியவற்றை உள்ளடக்கியது. இதன் விலை ரூ.86,042ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
10 ஆண்டுகளுக்கு முன்பாக யமஹா நிறுவனம் எஃப்இசட் வரிசையில் பைக்குகளை முதன்முதலாக அறிமுகப்படுத்தியது. அவற்றின் சிறப்பான செயல்பாடுகள் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களைப் பெற்றுத் தந்தது. தற்போதைய மாடலும், கவர்ச்சிகரமான வெளிப்புற வடிவமைப்பு, உயர்ரக என்ஜின் தொழில்நுட்பம், அதிக எரிபொருள் சிக்கனம், மேம்படுத்தப்பட்ட சஸ்பென்ஸன் உள்ளிட்ட ஏராளமான வசதிகளை உள்ளடக்கியது. இது, நிறுவனத்துக்கு மேலும் ஏராளமான புதிய வாடிக்கையாளர்களை ஈட்டித் தரும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிஜ்ஜார் கொலையில் மூவர் கைது: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உடன் தொடர்பு?

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பல கேள்விகளுக்கு பதில் கூற நேரமெடுக்கும்: ஹார்திக் பாண்டியா

தமிழகக் காவல்துறையின் இணையதளம் முடக்கம்!

மீண்டும் தெலுங்கு படத்தில் தனுஷ்?

SCROLL FOR NEXT