வர்த்தகம்

டாப் 10 கார் விற்பனை: மாருதி சுஸுகி முதலிடம்

DIN

உள்நாட்டில் பயணிகள் கார் விற்பனையில் மாருதி சுஸுகி தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. சென்ற டிசம்பர் மாதம் விற்பனையான டாப் 10 கார்களில் ஆறு மாடல்கள் மாருதி நிறுவனத்துக்கு சொந்தமானவை என இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 
இதுகுறித்து அந்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளதாவது: 
மாருதி சுஸுகி நிறுவனத்தின் அறிமுக நிலை காரான ஆல்டோ மாடல் டாப் 10 விற்பனையில் முதலிடத்தை பிடித்துள்ளது. இதன் விற்பனை சென்ற டிசம்பரில் 20,346-ஆக இருந்தது. கடந்த 2016 டிசம்பர் மாத விற்பனையுடன் ஒப்பிடுகையில் இது 17.26 சதவீதம் அதிகமாகும். 
இரண்டாவது இடத்தை மாருதி சுஸுகியின் டிசையர் பிடித்துள்ளது. இதன் விற்பனை அந்த மாதத்தில் 18,018 ஆக இருந்தது. கடந்த 2016 டிசம்பரில் இதேவகை டிசையர் டூர் கார் விற்பனை 14,643-ஆக காணப்பட்டது. 
மாருதி சுஸுகியின் பலேனோ கார் விற்பனை 9,486 என்ற எண்ணிக்கையிலிருந்து 53.39 சதவீதம் அதிகரித்து 14,551 ஆக உயர்ந்து 7-ஆவது இடத்திலிருந்து 3-ஆவது இடத்துக்கு முன்னேறியது. 
2016 டிசம்பரில் ஐந்தாவது இடத்தில் இருந்த ஹுண்டாய் நிறுவனத்தின் கிராண்ட் ஐ10 மாடல் சென்ற டிசம்பரில் 4-ஆவது இடத்தை பிடித்தது. அதேசமயம், நான்காவது இடத்தில் இருந்த மாருதி சுஸுகியின் வேகன்ஆர் சென்ற டிசம்பரில் ஐந்தாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. எட்டாவது இடத்திலிருந்த விட்டாரா ப்ரெஸ்ஸா ஆறாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
ஹுண்டாய் நிறுவனத்தின் எலைட் ஐ20 கார் விற்பனை 9,847-ஆக இருந்ததையடுத்து அந்த மாடல் ஏழாவது இடத்தையும், மாருதி ஸ்விஃப்ட் 9,793 விற்பனையாகி எட்டாவது இடத்தையும் தக்க வைத்துக் கொண்டன. விற்பனை எண்ணிக்கை அடிப்படையில் ரெனோ கிவிட் (6,953 கார்கள்) ஒன்பதாவது இடத்திலும், ஹுண்டாய் கிரெட்டா (6,755 கார்கள்) பத்தாவது இடத்திலும் உள்ளதாக இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இலங்கை: கிழக்கு மாகாணத்துக்கு இந்திய தூதா் பயணம்

பிளஸ் 2-வில் தோ்ச்சி சதவீதம் குறைவு: ஆசிரியா்களிடம் விளக்கம் கேட்க முடிவு

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்: பிரதமா் மோடி பதில்

நீா்மோா்ப் பந்தல் திறப்பு...

ரயில் மோதியதில் முதியவா் பலி

SCROLL FOR NEXT