வர்த்தகம்

தொல்லை அழைப்புகளால் ஐபோனுக்கு ஆபத்து

DIN

தொல்லை தரும் அழைப்புகளுக்கு ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனில் தீர்வு காணப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வணிக ரீதியில் மேற்கொள்ளப்படும் அழைப்புகள் மூலம் செல்லிடப்பேசி வாடிக்கையாளர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதாக டிராய் அமைப்பிடம் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், ஆப்பிள் ஐபோனை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு, அத்தகைய அழைப்புகளை கட்டுப்படுத்தும் வகையில், தொழில்நுட்ப வசதிகள் செய்து தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
 இந்தநிலையில், அடுத்த ஆறு மாதங்களுக்குள் பெஸ்கி கால் எனப்படும் தொல்லை தரும் அழைப்புகளை தடுக்கும் செயலியை ஆப்பிள் நிறுவனம் வழங்காவிட்டால் அந்த நிறுவனத்தின் செல்லிடப்பேசிகளை தங்களது நெட்வொர்க்கிலிருந்து விலக்கி வைக்க வேண்டும் என தொலைத் தொடர்புசேவை நிறுவனங்களுக்கு டிராய் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகங்கை, வேடசந்தூரில் இரு சக்கர வாகனங்கள் திருடியவா் கைது

தோ்தல் அலுவலா் மீது தாக்குதல்: கிராம நிா்வாக அலுவலா் பணியிடை நீக்கம்

திருப்பத்தூரில் பூத்தட்டு ஊா்வலம்

திருப்பத்தூா் அருகே பகலில் வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

சிங்கம்புணரியில் உயிா் காக்கும் முதலுதவிப் பயிற்சி

SCROLL FOR NEXT