வர்த்தகம்

மிதமான அளவில் பண்டிகை கால தங்கம் விற்பனை: உலக தங்க கவுன்சில்

DIN


இந்த தீபாவளி பண்டிகை காலத்தில் தங்கம் விற்பனை மிதமான அளவிலேயே இருக்கும் என உலக தங்க கவுன்சிலின் நிர்வாக இயக்குநர் (இந்தியா) சோமசுந்தரம் பிஆர் வியாழக்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் பிடிஐ செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:
இந்தியாவில் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் தங்கத்துக்கான தேவையானது 183.2 டன்னாக இருந்தது. கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் இது 10 சதவீதம் அதிகம்.
மதிப்பின் அடிப்படையில் இக்காலாண்டில் தங்கத்துக்கான தேவை ரூ.43,800 கோடியிலிருந்து 14 சதவீதம் உயர்ந்து ரூ.50,090 கோடியாக இருந்தது.
செப்டம்பர் காலாண்டின் முற்பகுதியில் 10 கிராம் தங்கத்தின் விலை (வரிகள்உள்பட) ரூ.29,000 என்ற அளவில் இருந்தது. நடப்பாண்டு ஜனவரியிலிருந்து உற்றுநோக்கும்போது இதுவே குறைந்தபட்ச விலையாகும். ஆனால், பிற்பகுதியில் ரூபாய் மதிப்பு சரிவால் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.32,000-ரூ.33,000 (வரிகள் இல்லாமல்) என்ற அளவில் மிக கடுமையாக உயர்ந்தது. இதையடுத்து, அதற்கான தேவை மிகவும் குறைந்து போனது.
இந்த நிலையில், முக்கிய சந்தையாக கருதப்படும் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு தங்கம் விற்பனையை வெகுவாக பாதித்தது.
பொதுவாக அக்டோபர்-டிசம்பர் கடைசி காலாண்டில் தங்கம் தொடர்பான பொருள்கள் விற்பனை மிகவும் சூடுபிடித்து காணப்படும். 
பண்டிகை தினங்கள், திருமண விசேஷங்கள் ஆகியவையே இதற்கு முக்கிய காரணம். 
ஆனால், தற்போது பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள பணத் தட்டுப்பாடு, விலை அதிகரிப்பு, பல மாநிலங்களில் நடைபெறவுள்ள தேர்தல் ஆகிய காரணங்களால் தங்கத்தின் விற்பனை மிதமான அளவிலேயே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
ஒட்டுமொத்த அளவில் நடப்பாண்டில் தங்கத்துக்கான தேவை 700-800 டன்னாக இருக்கும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

SCROLL FOR NEXT