வர்த்தகம்

பங்குச் சந்தை: சென்செக்ஸ் 61 புள்ளிகள் சரிவு

DNS

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ், திங்கள்கிழமை 61 புள்ளிகள் சரிந்து 35,000-க்கும் குறைவான புள்ளிகளுடன் நிறைவடைந்தது.

ஆசியச் சந்தையில் நிலவி வரும் மந்த நிலை, அமெரிக்க - சீன வா்த்தகப் போா் விவகாரத்தில் நிலவி வரும் நிச்சயமற்றற தன்மை காரணமாக முதலீட்டாளா்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டதால் இந்த வீழ்ச்சி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறைந்ததும், பங்குச் சந்தையை மந்தமடையச் செய்ததாக நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.

திங்கள்கிழமை தொடங்கிய மும்பை பங்குச் சந்தையில் பங்குகளை விற்பனை செய்வதில் முதலீட்டாளா்கள் மும்முரம் காட்டியதால், மிகவும் குறைந்தபட்சமாக 34,811 புள்ளிகள் வரை தாழ்ந்த சென்செக்ஸ், இறுதியில் 34,950 புள்ளிகளில் நிலைத்தது .

இதன் மூலம், மும்பை சென்செக்ஸ் திங்கள்கிழமை 61 புள்ளிகள் (0.17%) சரிந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

அதிரடி வீரர் மெக்கர்க் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாதது ஏன்?: விளக்கமளித்த ஆஸி. கேப்டன்!

‘மேதகு’ இசையமைப்பாளர் காலமானார்!

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளறுகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

SCROLL FOR NEXT