வர்த்தகம்

பேங்க் ஆஃப் இந்தியா நிகர இழப்பு ரூ.1,156 கோடி

DIN

பொதுத் துறையைச் சேர்ந்த பேங்க் ஆஃப் இந்தியா இரண்டாவது காலாண்டில் ரூ.1,156.25 கோடி இழப்பை சந்தித்துள்ளது.
 இதுகுறித்து அந்த வங்கி செபிக்கு திங்கள்கிழமை தெரிவித்துள்ளதாவது:
 நடப்பு 2018-19-ஆம் நிதி ஆண்டின் செப்டம்பருடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் பேங்க் ஆஃப் இந்தியாவின் மொத்த வருவாய் ரூ.10,800.24 கோடியாக இருந்தது. கடந்த நிதியாண்டில் இதே கால அளவில் வருவாய் ரூ.11,600.47 கோடியாக காணப்பட்டது.
 வங்கி கடந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் ரூ.179.07 கோடியும், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.95.11 கோடியும் நிகர லாபம் ஈட்டியிருந்த நிலையில் தற்போது ரூ.1,156.25 கோடி அளவுக்கு நிகர இழப்பு ஏற்பட்டுள்ளது. வாராக் கடன் அதிகரிப்பே இதற்கு முக்கிய காரணம்.
 வாராக் கடன் இடர்பாட்டை சமாளிக்க ஒதுக்கப்பட்ட தொகை ரூ.1,866.82 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.2,827.62 கோடியானது.
 மொத்த வாராக் கடன் ரூ.49,306.90 கோடியிலிருந்து உயர்ந்து ரூ.61,560.65 கோடியாகவும், நிகர வாராக் கடன் விகிதம் ரூ.23,565.73 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.25,994.15 கோடியாகவும் இருந்தது என பேங்க் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

வாணியம்பாடி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

SCROLL FOR NEXT