வர்த்தகம்

கோல் இந்தியா லாபம் 8 மடங்கு உயர்வு

DIN


பொதுத் துறையைச் சேர்ந்த நாட்டின் மிகப்பெரிய நிலக்கரி உற்பத்தி நிறுவனமான கோல் இந்தியாவின் இரண்டாம் காலாண்டு லாபம் 8 மடங்கு வளர்ச்சி கண்டுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு தெரிவித்துள்ளதாவது:
கோல் இந்தியா நிறுவனத்தின் மொத்த வருவாய் நடப்பு நிதியாண்டின் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் ரூ.24,209.3 கோடியாக இருந்தது. இது, கடந்த நிதியாண்டின் இதே கால அளவில் ரூ.19,171.7 கோடியாக காணப்பட்டது. நிறுவனத்துக்கான ஒட்டுமொத்த செலவினம் ரூ.18,143.7 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.19,091.5 கோடியாக இருந்தது. நிகர லாபம் ரூ.370.4 கோடியிலிருந்து 8 மடங்கு அதிகரித்து ரூ.3,085 கோடியானது. ஜூலை-செப்டம்பர் வரையிலான இரண்டாம் காலாண்டில் நிலக்கரி உற்பத்தி 11.30 கோடி டன்னிலிருந்து அதிகரித்து 11.96 கோடி டன்னானது என கோல் இந்தியா தெரிவித்துள்ளது. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மொத்த நிலக்கரி உற்பத்தியில் கோல் இந்தியாவின் பங்களிப்பு 80 சதவீதம். இந்நிறுவனம் நடப்பு 2018-19 நிதியாண்டில் 65.20 கோடி டன் நிலக்கரி உற்பத்தியை எட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT