வர்த்தகம்

தாவர எண்ணெய் இறக்குமதி 2.72% சரிவு

DIN


நாட்டின் தாவர எண்ணெய் இறக்குமதி 2017-18 பருவத்தில் 2.72 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது. 
இதுகுறித்து இந்திய எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் (எஸ்இஏ) தெரிவித்துள்ளதாவது:
கடந்த அக்டோபருடன் முடிவடைந்த 2017-18 எண்ணெய் பருவத்தில் தாவர எண்ணெய் இறக்குமதி 2.72 சதவீதம் குறைந்து 1.5 கோடி டன்னாகியுள்ளது. கடந்தாண்டில் இது 1.54 கோடி டன்னாக காணப்பட்டது.
2017-18 பருவத்தில் முதல் காலாண்டில் தாவர எண்ணெயின் இறக்குமதி விறுவிறுப்புடன் இருந்தது. இருப்பினும், ஜூன் மாதத்தில் இறக்குமதி வரியை மாற்றியமைத்தது, வேகமான ரூபாய் மதிப்பு சரிவு, கடன் நெருக்கடி ஆகியவற்றின் காரணமாக, இரண்டு மற்றும் மூன்றாம் காலாண்டுகளில் அதன் இறக்குமதி சரிவடைந்து போனது. அதேசமயம், நான்காவது காலாண்டில் தாவர எண்ணெய் இறக்குமதி கணிசமான அளவில் அதிகரித்தது. 
தாவர எண்ணெய் இறக்குமதியில் சமையல் எண்ணெய் இறக்குமதி 1.50 கோடி டன்னிலிருந்து 1.45 கோடி டன்னாக குறைந்தது. அதேசமயம், சமையல் சாரா எண்ணெய் இறக்குமதி 3.62 லட்சம் டன்னிலிருந்து 5.09 லட்சம் டன்னாக உயர்ந்தது என அந்த சங்கம் கூறியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்கக் கோரிக்கை

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

கேரளம், தமிழகத்துக்கான ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை தளா்வு

SCROLL FOR NEXT