வர்த்தகம்

டிவிஎஸ்: எக்ஸ்எல் ஐ-டச் ஸ்டார்ட் மாடல் அறிமுகம்

DIN


டிவிஎஸ் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான எக்ஸ்எல் 100 ஹெவி டியூட்டி ஐ டச் ஸ்டார்ட் வாகனத்தின் அறிமுக விழா கோவையில் நடைபெற்றது. 
இதுதொடர்பாக டிவிஎஸ் நிறுவனத்தின் துணைப் பொது மேலாளர்(பயன்பாட்டு வாகனங்கள் பிரிவு) என்.ஆர்.விக்னேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
டிவிஎஸ் எக்ஸ்எல்100 இருசக்கர வாகனங்கள் தினசரி உபயோகத்துக்கும், சரக்குப் போக்குவரத்துக்கும் உகந்த வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தன. இதற்கு வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. இந்நிலையில், இதன் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பான டிவிஎஸ் எக்ஸ்எல் 100 ஹெவி டியூட்டி ஐ-டச் ஸ்டார்ட் எனும் புதிய மாடலை அறிமுகப்படுத்தியுள்ளோம். தற்போதுள்ள வாகனங்களில் இடம்பெற்றுள்ள முக்கிய சிறப்பம்சமான எலக்ட்ரிக் ஸ்டார்ட் வசதி இதில் உள்ளது. 
இந்தியாவில் முதல்முறையாக ஸ்டார்ட்டர் ஜெனரேட்டர் எனும் புதிய எலக்ட்ரிக் ஸ்டார்ட் தொழில்நுட்பத்துடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய தொழில்நுட்பத்தின் மூலமாக மற்ற மாடல்களுடன் ஒப்பிடுகையில் 30 சதவீதம் குறைவான பேட்டரி ஆற்றலையே இது பயன்படுத்தும்.
மேலும், இந்த வாகனம் அகலமான பிளாட்ஃபார்மை கொண்டுள்ளது. இதன்மூலமாக கூடுதலான சரக்குகளை ஏற்றிச் செல்ல முடியும். இதேபோல தேவைப்படாதபோது பிரித்து எடுத்துக்கொள்ளக்கூடிய வகையில் பின்புற இருக்கை வசதியும் உள்ளது. 
கனரக டியூரா கிரிப் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளதால் அனைத்து விதமான சாலைகளிலும் பயணிக்க வசதியாக இந்த வாகனம் இருக்கும். இந்த வாகனத்தின் மீட்டர்களின் அருகே செல்லிடப்பேசியை சார்ஜ் செய்வதற்கான இணைப்பும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மாடல் பச்சை, சிவப்பு, கருப்பு, நீலம், காப்பர் ஷைன், கிரே, மினரல் பர்ப்பிள் ஆகிய வண்ணங்களில் கிடைக்கும். இதன் விலை ரூ. 37, 300-ஆக (எக்ஸ்-ஷோரூம்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

SCROLL FOR NEXT