வர்த்தகம்

இந்திய தொழிலக உற்பத்தி வளர்ச்சி விகிதம் 4.3%-ஆக குறைவு

தினமணி

சுரங்க துறையின் செயல்பாடு பின்னடைவைக் கண்டதையடுத்து, சென்ற ஆகஸ்ட் மாதத்தில் இந்திய தொழிலக உற்பத்தி வளர்ச்சி விகிதம் 4.3 சதவீதமாக குறைந்து போனது.
 இதுகுறித்து மத்திய புள்ளியியல் அலுவலகம் (சிஎஸ்ஓ) வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளதாவது:
 நடப்பாண்டு மே மாதத்தில் தொழிலக உற்பத்தி வளர்ச்சி விகிதமானது 3.9 சதவீதமாக காணப்பட்டது. இது ஜூன் மாதத்தில் 6.8 சதவீதமாகவும், ஜூலை மாதத்தில் 6.5 சதவீதமாகவும் இருந்தது. இந்த நிலையில், சென்ற ஆகஸ்ட் மாதத்தில் தொழிலக உற்பத்தி மூன்று மாதங்களில் காணப்படாத வகையில் 4.3 சதவீதமாக குறைந்துள்ளது.
 இதற்கு, கடந்தாண்டு ஆகஸ்டில் 9.3 சதவீதமாக காணப்பட்ட சுரங்கத் துறையின் உற்பத்தி நடப்பாண்டு இதே கால அளவில் 0.4 சதவீதமாக பின்னடைவைக் கண்டதே முக்கிய காரணம். ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான ஐந்து மாத காலத்தில் தொழிலக உற்பத்தி வளர்ச்சி விகிதம் 2.3 சதவீதத்திலிருந்து 5.2 சதவீதமாக அதிகரித்துள்ளது என சிஎஸ்ஓ தெரிவித்துள்ளது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெட்சணமாறக நாடாா் சங்க கல்லூரி ஆண்டு விழா

சேரன்மகாதேவி அருகே மின்கம்பம் விழுந்து ஒப்பந்த ஊழியா் பலி

தனியாா் நிறுவன ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை

களக்காடு சத்தியவாகீஸ்வரா் கோயிலில் மே 13- இல் வைகாசி திருவிழா கொடியேற்றம்

பிளஸ் 2: திலகா் பள்ளி 99.2% தோ்ச்சி

SCROLL FOR NEXT