வர்த்தகம்

கூகுள் இந்தியா வருவாய் ரூ.9,338 கோடி

தினமணி

கூகுள் இந்தியா நிறுவனம் கடந்த நிதியாண்டில் ரூ.9,338 கோடி வருவாய் ஈட்டியுள்ளது என கம்பெனி பதிவாளர் அலுவலகத்தை மேற்கோள்காட்டி டோஃப்ளர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 இதுகுறித்து மேலும் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2016-17-ஆம் நிதியாண்டில் கூகுள் இந்தியா நிறுவனத்தின் வருவாய் ரூ.7,239.5 கோடியாக இருந்தது. இந்த நிலையில் கடந்த 2017-18 நிதியாண்டில் அந்நிறுவனத்தின் வருவாய் 29 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.9,338 கோடியைத் தொட்டது.
 நிகர லாபம் ரூ.306.6 கோடியிலிருந்து 33 சதவீதம் உயர்ந்து ரூ.407.2 கோடியானது.
 கூகுள் இந்தியாவின் மொத்த செலவினம் ரூ.6,760.4 கோடியிலிருந்து 29 சதவீதம் அதிகரித்து ரூ.8,710.9 கோடியை எட்டியது.
 இந்திய சந்தைகளில் போட்டியை சமாளிக்க அந்நிறுவனம் தொடர்ந்து முதலீடு செய்து வருவதையடுத்து செலவினம் கணிசமான அளவில் அதிகரித்துள்ளது.
 கூகுள் நிறுவனத்தின் மொத்த விற்றுமுதலில் 69 சதவீத பங்களிப்பு விளம்பர வருவாய் வாயிலாக மட்டுமே கிடைத்து வருகிறது என டோஃப்ளர் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவலாளி சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம்

நகைக்கடை உரிமையாளா் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

கடற்கரையில் ஒதுங்கிய ஆண் சடலம்

மேற்கு வங்க இளைஞரிடம் வழிப்பறி: மாணவா்களிடம் விசாரணை

திருவள்ளூா்: வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகள்

SCROLL FOR NEXT