வர்த்தகம்

தங்கம் இறக்குமதி 4 சதவீதம் அதிகரிப்பு

DIN


நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாத காலத்தில் உள்நாட்டில் தங்கம் இறக்குமதி 4 சதவீதம் அதிகரித்துள்ளது. 
இதுகுறித்து மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
நாட்டின் தங்கம் இறக்குமதி நடப்பு 2018-19-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான முதல் அரையாண்டு காலத்தில் 1,763 கோடி டாலராக (ரூ.1.23 லட்சம் கோடி) இருந்தது. கடந்த நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 1,696 கோடி டாலராக (ரூ.1.18 லட்சம் கோடி) காணப்பட்டது. இதையடுத்து, ஆறு மாத காலத்தில் உள்நாட்டில் தங்கம் இறக்குமதி 4 சதவீதம் அதிகரித்தது.
இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்தின் அளவு கணிசமாக அதிகரித்ததையடுத்து இரண்டாவது காலாண்டில் நாட்டின் வர்த்தக பற்றாக்குறை 9,432 கோடி டாலராகியுள்ளது. கடந்த நிதியாண்டில் இது 7,666 கோடி டாலராக காணப்பட்டது.
அந்நியச் செலாவணி வரத்துக்கும் அதன் செலவுக்கும் இடைப்பட்ட வித்தியாசமான நடப்பு கணக்கு பற்றாக்குறை முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.4 சதவீதம் அளவுக்கு அதிகரித்தது. வர்த்தக பற்றாக்குறை அதிகரிப்பு மற்றும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு ஆகியவை நடப்பு கணக்கு பற்றாக்குறையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தம் காரணிகளாக இருந்தன.
நடப்பாண்டு ஜூன் வரையில் எதிர்மறை வளர்ச்சிக்குப் பிறகு, தங்கத்தின் இறக்குமதி இரட்டை இலக்க வளர்ச்சியைக் தொட்டது. குறிப்பாக ஆகஸ்ட் மாதத்தில் அதன் இறக்குமதி 51.5 சதவீதம் உயர்ந்து 260 கோடி டாலராக காணப்பட்டது என்று அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆபரண துறையில் தேவை அதிகரித்து வருவதையடுத்து, சர்வதேச சந்தையிலிருந்து இந்தியா அதிக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்து கொள்ளும் நாடாக விளங்குகிறது. அளவின் அடிப்படையில் ஆண்டுக்கு 800-900 டன் தங்கத்தை இந்தியா இறக்குமதி செய்து கொள்வது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

திருவாரூா்-காரைக்குடி பயணிகள் ரயில் தினமும் இயக்கம்

டாஸ்மாக் கடை ஊழியா் மீது தாக்குதல்

மேம்பால தடுப்பின் மீது அரசுப் பேருந்து மோதி 5 போ் காயம்

வணிகா் தின கொடியேற்று விழா

SCROLL FOR NEXT