வர்த்தகம்

ஹெச்டிஎஃப்சி வங்கியின் லாபம் ரூ.5,005 கோடியாக அதிகரிப்பு

தினமணி

தனியார் துறையைச் சேர்ந்த ஹெச்டிஎஃப்சி வங்கி இரண்டாவது காலாண்டில் ரூ.5,005.73 கோடி லாபம் ஈட்டியுள்ளது.
 இதுகுறித்து பங்குச் சந்தைக்கு அந்த வங்கி தெரிவித்துள்ளதாவது: நடப்பு நிதியாண்டின் செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில் ஹெச்டிஎஃப்சி வங்கியின் மொத்த வருவாய் ரூ.28,215.2 கோடியாக இருந்தது. கடந்த நிதியாண்டின் இதே கால அளவில் ஈட்டிய வருவாய் ரூ.23,276.2 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 21.2 சதவீதம் அதிகமாகும்.
 நிகர லாபம் ரூ.4,151.03 கோடியிலிருந்து 20.6 சதவீதம் அதிகரித்து ரூ.5,005.73 கோடியாக இருந்தது. நிகர வட்டி வருவாய் ரூ.9,752.1 கோடியிலிருந்து 20.6 சதவீதம் உயர்ந்து ரூ.11,763.4 கோடியாக காணப்பட்டது.
 செப்டம்பர் 30-ஆம் தேதி நிலவரப்படி மொத்த வாராக் கடன் விகிதம் 1.26 சதவீதத்திலிருந்து உயர்ந்து 1.33 சதவீதமாக இருந்தது. அதேசமயம், நிகர வாராக் கடன் விகிதம் 0.43 சதவீதத்திலிருந்து குறைந்து 0.40 சதவீதமாகியுள்ளது என ஹெச்டிஎஃப்சி வங்கி தெரிவித்துள்ளது.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT